ஜெயலலிதாவுடன் பியூஸ் கோயல் இன்று சந்திப்பு

ஜெயலலிதாவுடன் பியூஸ் கோயல் இன்று சந்திப்பு
Updated on
1 min read

முதல்வர் ஜெயலலிதாவை அவரது வீட்டில் இன்று மாலை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசுகிறார்.

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன், மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், முதல்வர் ஜெயலலிதாவை பலமுறை சந்திக்க முயன்றும் முடியவில்லை என்று தெரிவித்து இருந்தார். இந்த விவகாரம் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற் றார். இந்நிலையில், சமீபத்தில் பிரதமரை சந்தித்த முதல்வர், பல்வேறு மின் திட்டங்களுக்கான அனுமதி மற்றும் திட்ட உதவிகளை கோரியிருந்தார்.

மேலும், சமீபத்தில் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில், காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் உபரி மின்சாரத்தை, அண்டை மாநிலங்களுக்கு வழங்கும் வகையில், பசுமை வழித்தடம் அமைக்க வேண்டும் என கோ ரியிருந்தார். இந்நிலையில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங் கேற்க பியூஸ் கோயல் இன்று சென்னைக்கு வருகிறார். அவர் இன்று மாலை 5.45 மணிக்கு முதல்வர் ஜெயலலி தாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்திக்கிறார்.

முன்னதாக, ஐஐடி சென்னை வளாகத்தில், மின்கலன் பொறி யியல் மற்றும் மின் வாகனங்கள் மையத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in