Published : 21 Jul 2015 04:58 PM
Last Updated : 21 Jul 2015 04:58 PM

ட்வீட்டாம்லேட்: மதுவிலக்கு- அறிவிப்பு ஒன்று... தெறிப்புகள் பல!

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமுதாய மாற்றத்திற்கும், ஏற்றத்திற்கும் வழி வகுக்கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் தலைவர் கருணாநிதி அறிவித்தார்.

இந்த ஒற்றை அறிவிப்பு, தமிழக அரசியல் மட்டத்தில் மட்டுமல்ல... கருத்துத் தெறிப்புகளில் தீவிரமாக இயங்கும் நெட்டிசன்களையும் நிமிர்ந்து உட்கார வைத்துள்ளது.

கருணாநிதி வெளியிட்ட ஒற்றை அறிவிப்பை முன்வைத்து, நேற்று - இன்று - நாளைய அரசியல் சமூக நிகழ்வுகளை மேற்கோள்காட்டி, ட்விட்டரில் கருத்துகளைக் கொட்டி வருகிறார்கள் நெட்டிசன்கள். இதேபோல், தொடர்புடைய செய்திகளின் கருத்துப் பகுதியில், 'தி இந்து' ஆன்லைன் வாசகர்களும் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அந்தத் தெறிப்புகளில் சில இன்றைய ட்வீட்டாம்லேட்டில்..

காக்கைச் சித்தர் ‏@vandavaalam - தினமும் 200 ரூபாய் சம்பாதித்து, அதில் 150-க்கு குடித்து மீதியை வீட்டுக்கு கொடுக்கும் கணவன் அமையப்பெற்ற மனைவி நிச்சயம் மகிழ்வாள் #மதுவிலக்கு

Ethirajan ‏@Ethirajans - மதுவிலக்கு அமலுக்கு வந்தால் அதற்கான க்ரெடிட் முகவுக்கோ, அல்லது வைகோவுக்கோ போய்விடக் கூடாதுதான் ராமதாஸின் தற்போதைய கவலை. :P

கோ.செந்தில்குமார் ‏@oorkkaaran - ஆக.. மதுவிலக்கு என்பது ஓட்டு/வெற்றி வாங்கித்தரும் என்ற அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டதா?! நல்லது.

Gokila ‏@gokila_honey - திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு - மு.க உறுதி | #அய்யா அது அப்புறம் பாக்கலாம் முதல்ல உங்க கட்சிக்காரங்க சாராய ஆலையை மூடுங்க இன்னைக்கே.

!! *எமகாதகன்* !!! ‏@Aathithamilan - ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு -கலைஞர் | #தலைவரே அப்படியே குடிகார தொண்டர்களின் உறுப்பினர் அட்டை பறிக்கப்படும்னு ஒரு அறிக்கை விடுங்க.

அகராதி ‏@agarathi1 - பாமக வளர்ச்சி மீதான பயத்தைக் காட்டுகிறது கருணாநிதியின் 'மதுவிலக்கு' அறிவிப்பு-அன்புமணி #இவரு வேற இடையில இடையில சிரிப்புக் காட்டிக்கிட்டு!

இந்திரஜித் ‏@kapadavedathari - ஆட்சிக்கு வந்த முதல் நாளில் விவசாயக் கடனை முற்றிலும் ரத்து செய்தவர் கலைஞர். எனவே அவர் நினைத்தால் மதுவிலக்கு சாத்தியம்.

Indiavaasan ‏@indiavaasan - இப்போது பிரச்னை மதுவிலக்கு அல்ல! அதைச் சொன்னவர் கலைஞர் என்பதுதான்.

பாண்டிண்பா ‏@catchpandian - மதுவிலக்கு அமல்படுத்துவது அப்புறம்... குடிப்பவர்கள் அனைவரும் கட்சியை விட்டுச் சென்றுவிடுங்கள்னு சொல்ற துணிச்சல் எந்தக் கட்சிக்காவது இருக்கா?

அழகிய தமிழ் மகன் ‏@kaviintamizh - மதுவிலக்கு வேண்டும்னு சொன்னவங்க, கருணாநிதி நாங்க கொண்டு வருவோம்னு சொன்னவுடனே அதெப்படி சாத்தியம்னு பேச ஆரம்பிச்சிட்டாங்க # இதானுங் நடுநிலை

Satheesh Kumar ‏@saysatheesh - கலைஞரின் மதுவிலக்கு அறிவிப்பை எல்லோரும் பாராட்ட, ஜெ உடனே மதுவிலக்கை அமல்படுத்தணும்னு அறிக்கை விட்டார் பாரு வைகோ, அதான் க்ளூ

வந்தியத்தேவன் ‏@kalasal - பூரண மதுவிலக்கு சாத்தியமா என்பது இரண்டாம் பட்சம், ஆனால் கலைஞர் இதை முன்மொழிந்திருப்பது நிச்சயமாய் பாராட்டப்பட வேண்டிய விசயம்...

குறும்புக்காரன் ‏@kurumbukaran - திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு - மு.க உறுதி | ராமதாஸ் பல வருடம் கஷ்டப்பட்டு உருவாக்குன இமேஜ கலைஞர் ஒரே நாள்ல தட்டி பறிச்சுட்டார்.

muthusiva ‏@s_muthusiva - பலர் சொல்லும்போது அதெல்லாம் சாத்தியமே இல்லைனு சொல்லி கிண்டல் பண்ண பல திமுக ஆதரவாளர்கள் கலைஞர் சொன்ன உடனே புகழ்ந்துட்டு இருக்காங்க #மதுவிலக்கு

-ATHISHA 2:11:11 ‏@athisha - காலைல எங்கம்மா சொல்லிகிட்டிருந்தாங்க மதுவிலக்கு அமல்படுத்துவார்னா அடுத்த தேர்தல்ல கலைஞருக்குதான் என் ஓட்டுனு! #நேரடியாகபாதிக்கப்பட்டவங்க.

»புரட்சி புயல்« • ‏@itskabi - மதுவிலக்கு: கருணாநிதி சொல்வதை கேட்டு மக்கள் ஏமாற மாட்டார்கள் - ராமதாஸ் # ஒரே ஆயுதம் மதுவிலக்கும் போச்சேனு மனசுக்குள்ள அழறது வெளியில கேக்குது.

vijayakumar k ‏@vijayakumark10 - #மதுவிலக்கு. நடந்தால் தமிழ்நாட்டுக்கு நல்லது மக்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது

பரம்பொருள் ‏@paramporul - #BanTasmac டேக்ல மூச்சு முட்ட ட்வீட்டின ஆளுக இன்று மதுவிலக்கு சாத்தியமில்லை, அது இதுன்னு பேசுறாங்க. #MK சொன்னதால. #உங்க நடுநிலைல தீய வைக்க

கே கண்மணி :p ‏@pattikaduu - தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' : கருணாநிதி #வரும் ஆனால் வராது

புகழ் ‏@mekalapugazh - திமுக தோத்துட்டா... மதுவிலக்குக்கு மக்கள் ஆதரவில்லைன்னு சொல்லி காலத்துக்கும் மதுவிலக்கு பற்றி யாரும் பேசமாட்டாங்கதானே...

நதி முகம் ‏@nadhimugam - பூரண மதுவிலக்கு பற்றி பேசும் தலைவர்கள் முதலில் மது இல்லாமல் ஒரு பொதுக்கூட்டத்தை நடத்திக் காட்டுங்கள் அதன் பிறகு மதுவிலக்குப் பற்றி பேசுங்கள்

சாதாரணன்© ‏@ramdraghav - நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு-கலைஞர்! #தட் இவங்களே பாம் வெச்சுட்டு இவங்களே எடுத்துருவாங்களாம் மொமன்ட்

ரைட்டர் இம்ச ‏@writer_imsa - மதுவிலக்கு அமலாச்சின்னா நம்ம ட்விட்டர் போராளிகள் மட்டும் தான் காரணமா இருக்க முடியும். கோடிக்கணக்கான வலியுறுத்தல்கள் #BanTasmac

கயல்விழி ‏@kayal_v - திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: கருணாநிதி# புனர்வாழ்வு மையங்களும் அமைச்சுடுங்க தலைவரே..!!

ஏகலைவன் ‏@Eakalaivan - 100 நாட்களில் கருப்புபணத்தை மீட்டு வருவோம்-மோடி | தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றுவோம்-ஜெயா | அதே மாதிரி ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு-கருணாநிதி

ஜிரா GiRa ‏@RagavanG - மதுவிலக்கைப் பத்தி யார் பேசினாலும் கிண்டல் செய்யப்படுவர். வைகோ, ராமதாஸ், கலைஞர்.

anbu ‏@anbu - டாஸ்மாக் மூடப்படும் என விரைவில் சிக்சர் அடிக்கும் அறிக்கை வந்தாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை!!! போடுங்கம்மா ஓட்டு...

பா.தன லட்சுமி ‏@DHANALA09 - திமுக ஆட்சிக்கு வந்தால் மது விலக்கை அமல் செய்ய நடவடிக்கை: கருனாநிதி. #வலையை விரிச்சாச்சு கூட்டணிக்கு யார் சிக்குறாங்கனு பார்ப்போம்.

Satheesh Kumar ‏@saysatheesh - மது எதிர்ப்பு கட்சிகளை எல்லாம் ஓரணியில் திரட்ட உதவும் அறிவிப்பு இது. டாஸ்மாக் Vs மதுவிலக்கு இது தான் election தீம்.

தான்தோன்றி ‏@tamilanbanc - "மது ஓழிப்பு தீவிர நடவடிக்கை" ....நான் சொல்ற ஒவ்வொரு பொய்லயும் ஒரு உண்மை இருக்கும்... ஒவ்வொரு உண்மைலயும் ஒரு பொய் இருக்கும் #சதுரங்கவேட்டை

பித்தன் ‏@kiramaththan - எது எப்படியோ, மது விலக்கை இந்தத் தேர்தலில் ஒரு டாபிக்காக மாற்றியது மது எதிர்ப்பாளர்களுக்குக் கிடைத்த வெற்றி! :)

'தி இந்து' ஆன்லைன் வாசகர்களின் கருத்துகள்:

நல்ல பெருமாள்: அப்போ இப்ப இருக்கிற இலவசங்கள் யாவும் விலக்கிகொள்ளப்படுமா?

கண்ணன்: தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்பது ஓட்டுக்காக மக்களை ஏமாற்றும் ஓட்டு வாக்குறுதியாகத்தான் தோன்றுகிறது. மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று உறுதி கொடுப்பாரானால், மறுபடி அவருக்கு ஒருவாய்ப்பு கொடுக்க யோசிக்கலாம். நல்ல விசயம் என்னவென்றால் மதுவிலக்கு வரும் தேர்தலில் மிக முக்கிய பங்காற்றும் என்று அனைத்து கட்சிகளும் உணர ஆரம்பித்திருப்பதுதான்.

ரவிச்சந்திரன்: இந்த வாக்குறுதியில் உறுதியாக இருக்க வேண்டும். வெற்றி தோல்வி பற்றி கவலைப்படாமல், ஒரே நாளில் முடியாது. படிப்படியாக குறைக்க தீவிர முயற்சி செய்ய வேண்டும்.

செந்தில்: தேர்தலுக்கான அறிவிப்பு என்றாலும் சொல்லிட்டா செய்து விடகூடியவர் என்பதால் வரவேற்போம்.

வருண்: தனி மனிதனாக இருந்தாலும் அரசியல் கட்சியாக இருந்தாலும் தவறை உணர்ந்து திருத்திக் கொள்வது மாற்றத்துக்கு அறிகுறி. வளர்ச்சிக்கான வழி. கருணாநிதி இவ்வாக்குறுதியை நிறைவேற்றுவார் என நம்புவோம்.

சின்னப்பன்: வாக்கு வங்கி அரசியல்தான்; ஆனால், இவர் சொன்னால் செய்வார் என்று நம்பலாம்.

புதுநிலா: மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா இல்லையா? உண்டு/இல்லை. ஒரே பதில் வேண்டும்.

டாக்டர் ஏ.அரிமாபாமகன்: கண்கெட்ட பிறகு சூரிய வணக்கம்! இப்'போதைக்கு' மாற்றமில்லை எனச் சட்டப் பேரவையில் சிலேடை மொழிந்தவர் ஆயிற்றே. தேர்தல் வந்தால் எப்படியெல்லாம் பேசவேண்டியிருக்கிறது! கொடுத்தவனே பறித்துக் கொண்டான்டி என மக்கள் பாடுவார்களா?

பரமா: தள்ளாத வயதில் வீடு தேடி வந்து மதுவிலக்கை அமல்படுத்தச் சொன்ன ராஜாஜியின் வேண்டுகோளை புறந்தள்ளிவிட்டு சாராயத்தை தமிழக இளைஞர்களுக்கு அறிமுகப்படுத்தி இன்றளவும் அதன் பாதிப்புக்கு முக்கிய காராணமான இவர், வயதான காலத்தில் பிராயசித்தம் தேடிக்கொள்கிறாரா?

ஜெயா சரவணன்: இது ஒரு அரசியல் ஸ்டண்ட். அன்புமணியை ஓவர் டேக் செய்து மெகா கூட்டணியை அமைக்கும் வியூகம் தான் இது. டாஸ்மாக் இல்லாத காலத்தில் இவருடைய ஆட்சியில் மலிவு விலை மதுவும், கள்ளச்சாராயமும் பெருக்கெடுத்து ஓடியது. காவல் துறைக்கு மாமூல் குவிந்தது.

லக்‌ஷ்மணன்: ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை வழிநடத்த முடியாத சூழ்நிலை இன்றைய அரசியலில் நிலவுகிறது. மக்களை குடிகாரங்களாக மாற்றி அவர்களிடம் இருந்து பணம் வாங்கி திட்டங்களை செயல்படுத்துகிறார்கள் என்ற ஐயப்பாடு உள்ளது. ஏன் மது இல்லாமல் நாட்டை வழி நடத்த முடியாதா?

அனிதா: செய்வதைச் சொல்வார், சொன்னதைச் செய்வார் கலைஞர் என்ற நல்ல பெயர் உண்டு. மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கலைஞரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. அதிமுகவிற்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியாகவே இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x