

தமிழகத்தில் காற்றில் ஈரப்பதம் குறைந்ததால் வெப்பம் அதிகரித் துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது: தமிழகத்தில் பரவலாக மழை குறைந்துள்ளது. மேலும் தரைக்காற்றும் வீசி வருகிறது. இது மட்டுமல்லாது, ஆந்திர கடலோரப் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழக பகுதியில் உள்ள காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்படுகிறது. இதனால் தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம் குறைந்து வெப்பம் அதிகரித்துள்ளது.
மதுரையில் 39 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சி மற்றும் தூத்துக்குடியில் 37.5 டிகிரி செல்சியஸ், பரங்கிப்பேட்டையில் 37 டிகிரி செல்சியஸ், பாளையங் கோட்டையில் 36.7 டிகிரி செல் சியஸ் வெப்பநிலை பதிவாகி யுள்ளது.
மழையை பொருத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்ப சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்த வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்ப நிலையாக 35 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 28 டிகிரி செல்சியஸ் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.