கோவில்பட்டி: கைத்தறி ஆடை அணிய சார் ஆட்சியர் ஸ்கேட்டிங் பயணம்

கோவில்பட்டி: கைத்தறி ஆடை அணிய சார் ஆட்சியர் ஸ்கேட்டிங் பயணம்
Updated on
1 min read

கதர் ஆடை அணிய வலியுறுத்தி கோவில்பட்டியில், மாணவர்களுடன் சார் ஆட்சியர் ஸ்கேட்டிங் பயணம் மேற்கொண்டார்.

அனைவரும் கைத்தறி கதர் ஆடை அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, கோவில்பட்டி சுவாமி விவேகானந்தா யோகா ஸ்கேட்டிங் கழகம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, கோவில்பட்டி கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஜெயக்குமார், மைக்கோ பாயின்ட் ஐ.டி.ஐ. முதல்வர் ஆம்ஸ்ட்ராங், ஜானகி அம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ராஜசேகர், மத்திய திரைப்பட தணிக்கைக் குழு உறுப்பினர் முருகானந்தம் முன்னிலை வகித்தனர்.

கோவில்பட்டி மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் ஸ்கேட்டிங் போட்டியை தொடங்கி வைத்தார். கோவில்பட்டி சார் ஆட்சியர் விஜய கார்த்திகேயன், மாணவர்களுடன் ஸ்கேட்டிங் சென்றார். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கே.ஆர்.ஏ. வித்யாஷ்ரம் பள்ளி பெற்றது. தனிநபர் சாம்பியன் பட்டத்தில் முதல் இடத்தை தூத்துக்குடி எஸ்.டி.ஆர். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2-வது இடத்தை தூத்துக்குடி புனித தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 3-வது இடத்தை தூத்துக்குடி ஹோலிகிராஸ் நர்சரி பள்ளி, சிறப்பு பரிசை கோவில்பட்டி எடுஸ்டார் பள்ளி வென்றது. வெற்றி பெற்றவர்களை ஸ்கேட்டிங் கழக நிறுவனர் சுரேஷ்குமார் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in