20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 நாளை பாய்கிறது: 48 மணி நேர கவுன்ட் டவுன் தொடக்கம்

20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 நாளை பாய்கிறது: 48 மணி நேர கவுன்ட் டவுன் தொடக்கம்
Updated on
1 min read

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான 48 மணிநேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கியது.

தொழில்நுட்பங்களுக்காக, வளர்ந்த நாடுகளை சார்ந்திருக்கும் நிலையை மாற்றி, தன்னிறைவு பெறுவதற்கான முயற்சியில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) ஈடுபட்டு வருகிறது. நம் நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வெளிநாட்டு செயற் கைக் கோள்களையும் இஸ்ரோ விண்வெளிக்கு அனுப்பி வருகிறது.

ஆந்திர மாநிலம் ஹரி கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2-வது ஏவுதளத்தில் இருந்து 20 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி - சி34 ராக்கெட் 22-ம் தேதி (நாளை) காலை 9.25 மணிக்கு விண்ணில் ஏவப்படு கிறது. இதற்கான 48 மணிநேர கவுன்ட்டவுன் நேற்று (திங்கள்) காலை தொடங்கியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதில் சத்தியபாமா பல்கலைக் கழகம், புணே பொறியியல் கல்லூரி, இஸ்ரோவின் கார்ட்டோ சாட்-2 ஆகிய 3 செயற்கைக் கோள்கள் இந்தியாவை சேர்ந் தவை. மற்ற 17 செயற்கைக் கோள்களும் அமெரிக்கா, ஜெர்மனி, கனடா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டோசாட்-2 செயற்கைக் கோள் பூமியை படமெடுத்து அனுப்புதல், கடல் போக்கு வரத்தை ஒழுங்குபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ளும். இதன் எடை 727.5 கிலோ. பூமியில் இருந்து 505 கி.மீ. தொலைவில் இந்த செயற்கைக் கோள் நிலைநிறுத்தப்படும்.

‘சத்தியபாமாசாட்’ செயற்கைக் கோள், சென்னை சத்தியபாமா பல்கலைக்கழக மாணவர்கள் தயாரித்ததாகும். இது 1.5 கிலோ எடை கொண்டது. பசுமை இல்ல வாயுக்கள் குறித்த தகவல்களை சேகரிப்பதற்காக இது அனுப்பப் படுகிறது. புணே பொறியியல் கல்லூரி தயாரித்துள்ள ‘ஸ்வயம்’ செயற்கைக் கோள் 1 கிலோ எடை கொண்டது.

இதற்கு முன்னதாக, 2008-ம் ஆண்டு ஒரே ராக்கெட் மூலம் 10 செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in