

வரும் 8-ம் தேதி நடைபெற உள்ள ராகு-கேது பெயர்ச்சி விழாவை யொட்டி திருநாகேசுவரம் மற்றும் கீழப்பெரும்பள்ளம் கோயில்களில் தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள திருநாகேசுவரத்தில் நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகு தலமான நாகநாத சாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் ராகு பகவான் தனது இருதேவியருடன் அருள்பாலிக் கிறார்.
இக்கோயிலில் மங்கள ராகு வாக எழுந்தருளி, தன்னை வணங்கு பவர்களுக்கு காலசர்ப்பதோஷம், சர்ப்பதோஷம், களத்திரதோஷம், புத்திரதோஷம் ஆகியவைகளை நீக்கி அருள்பாலிக்கிறார். இங்கு ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவது சிறப்பு.
ராகு பகவான் வரும் 8-ம் தேதி நண்பகல் 12.37 மணிக்கு கன்னி ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடை கிறார். இதையொட்டி மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் போன்ற ராசிக்காரர்கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது எனக் கூறப்படுகிறது.
ராகு பகவானுக்கு நாளை (ஜனவரி 4) முதல் 6-ம் தேதி வரை முதல்கட்டமாகவும், ஜனவரி 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை 2-வது கட்டமாகவும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 8-ம் தேதி ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, பகல் 12.37 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது. அன்று மாலை வெள்ளி ரிஷப வாகனத்தில் ராகு பகவான் வீதியுலா நடைபெறுகிறது.
கீழப்பெரும்பள்ளம் கோயிலில்...
நாகை மாவட்டம் பூம்புகார் அருகேயுள்ள கேது தலமான கீழப் பெரும்பள்ளத்தில் கேது பெயர்ச்சி விழாவுக்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன.
கீழப்பெரும்பள்ளம் நாக நாதசாமி கோயிலில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் கேதுபகவான். இவரை வழிபட்டால் திருமணத் தடை, புத்திர தோஷம் நீங்கி, செல்வ செழிப்பு, நீதிமன்ற வழக்கு களில் வெற்றி கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
வரும் 8-ம் தேதி பகல் 12.37 மணிக்கு கேது பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதையொட்டி அன்று காலை விநாயகர் பூஜை யுடன் யாக சாலை பூஜைகள் தொடங்குகின்றன.
தொடர்ந்து கேது பரிகார வேள்வி நடைபெறுகிறது. பகல் 12.37 மணிக்கு பெயர்ச்சி அபிஷேகம், தீபாராதனை நடை பெறுகிறது. ரிஷபம், விருச்சிகம், மிதுனம், கடகம், சிம்மம், மகரம், கும்பம், மீனம் போன்ற ராசிக்காரர் கள் பரிகாரம் செய்துகொள்வது நல்லது எனக் கூறப்படு கிறது.
இதற்கான ஏற்பாடுகளை அற நிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.