

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நாளை தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியா தையை ஏற்றுக் கொள்கிறார்.
இந்தியாவின் 68-வது குடி யரசு தினம் நாடு முழுவதும் நாளை (26-ம் தேதி) கொண்டாடப்படு கிறது. தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் சென்னை மெரினா கடற்கரை காந்தி சிலை அருகே குடியரசு தின விழா கொண்டாடப்படும்.
அங்கு அமைக்கப்படும் தற்காலிக கொடிக் கம்பத் தில் தேசியக் கொடியை ஆளுநர் ஏற்றிவைத்து முப்படைகள், காவல்துறையினரின் அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். மேலும், தமிழக அரசின் பல்வேறு துறை களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு, மாணவ, மாணவி களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடக்கும்.
தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லை. மகாராஷ்டிர மாநில ஆளுநர் சி.எச்.வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக உள்ளார். அவர் குடியரசு தினத்தன்று மகாராஷ்டிர மாநிலத்தில் கொடியேற்றுகிறார். இதனால், இந்த ஆண்டு தமிழகத்தில் முதல்முறையாக குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை முதல்வர் ஏற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதன்படி, மெரினாவில் நாளை நடக்கும் குடியரசு தின விழாவில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார்.
மேலும், வீரதீர செயலுக்கான விருது, மதநல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது உள்ளிட்ட விருதுகளையும் அவர் வழங்குகிறார். விழாவில் அமைச்சர்கள், நீதிபதிகள், முக்கியப் பிரமுகர்கள் பங்கேற் கின்றனர். குடியரசு தின விழாவையொட்டி அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்துக்கு நிரந்தர ஆளுநர் இல்லை என்பதால் இந்த ஆண்டு முதல்முறையாக குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை முதல்வர் ஏற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.