

கடற்கரை சாலையில் தடுப்பு ஏற்படுத்தி போக்குவரத்துக்கு இடையூறு செய்த போலீ்ஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் ‘திமுக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 22-ம் தேதி போலீஸ் மானிய கோரிக்கையின்போது தலைமைச் செயலகம் அமைந் துள்ள கடற்கரை சாலையில் போலீஸார் இரும்பு தடுப்புகளை அமைத்து போக்குவரத்துக்கு கடும் இடையூறு ஏற்படுத்தினர். இதை நேரில் பார்க்கச் சென்ற என்னை எஸ்பிளனேடு போலீ ஸார் தடுத்து நிறுத்தி சட்டவிரோத காவலில் வைத்தனர்.
எனவே, இந்த சாலையில் தேவையின்றி தடுப்பை ஏற் படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ என அதில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதி பதிகள் இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி அரசு வழக்கறிஞருக்கு உத்தர விட்டனர்.