Published : 23 Jun 2017 07:48 AM
Last Updated : 23 Jun 2017 07:48 AM

தடையை மீறி நடைபயணம் மேற்கொண்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் கைது

தடையை மீறி நடைபயணம் மேற் கொண்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் தாம்பரத் தில் நேற்று கைது செய்யப்பட்டனர்.

சாதி ஆணவப் படுகொலை களை தடுக்க தனி சிறப்புச் சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன் னணியினர் அதன் பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் தலைமையில் கடந்த 9-ம் தேதி சேலத்தில் இருந்து நடை பயணத்தை தொடங்கினர். இந்த நடைபயணம் நேற்று தாம்பரத்தை வந்தடைந்தது.

தாம்பரத்தில் நடைபயணத்தை தொடங்கி வைத்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் ஜி.ராம கிருஷ்ணன், “சேலத்தில் 9-ம் தேதி புறப்பட்ட இந்த நடைபயணம் 365 கிமீ கடந்து சென்னை வந்துள்ளது. தமிழகத்தில் சாதிமறுப்பு திரு மணம் செய்துகொள்வோர் கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வரு கின்றனர். தீண்டாமை கொடு மைக்கு முற்றுப்புள்ளி வைக்க, சாதி ஆணவக் கொலைகளை தடுக்க தனிச்சட்டம் கொண்டுவர இந்த பயணம் நடக்கிறது.

இந்த நடைபயணம் சென்னைக் குள் செல்ல காவல்துறை தடை விதித்துள்ளது. இதை வன்மை யாக கண்டிக்கிறோம். இந்தக் சட்டப்பேரவை கூட்டத் தொடரி லேயே சாதி ஆணவக் கொலை களை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்று முதல மைச்சரையும், ஆளுங்கட்சியின் ஒரு பிரிவாக உள்ள ஓ.பன்னீர் செல்வத்தையும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினையும் கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.

பின்னர் காவல்துறையின் தடையை மீறி நடைபயணம் தொடங்கியது. இந்த நடைபய ணத்தை காவல்துறையினர் தடுத் ததைத் தொடர்ந்து அங்கு தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ஜி.ராமகிருஷ்ணன், பி.சம்பத், கே.சாமுவேல்ராஜ் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x