Published : 01 Oct 2014 10:25 AM
Last Updated : 01 Oct 2014 10:25 AM

ஜெயலலிதா கைதுக்கு கண்டனம்: டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற போலீஸ்காரர்

ஜெயலலிதா கைது செய்யப் பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போலீஸ்காரர் ஒருவர் டிஜிபி அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார்.

தேனி மாவட்டம் ஓடப்பட்டியில் போலீஸ்காரராக இருப்பவர் வேல்முருகன் (42). அலுவலக வேலை தொடர்பாக நேற்று காலையில் சென்னை வந்தார். பின்னர் போலீஸ் உடையுடன் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலு வலகத்துக்கு சென்ற வேல் முருகன், பிரதான வாயில் முன்பு நின்றுகொண்டு கையில் வைத் திருந்த மண்ணெண்ணெய் பாட் டிலை திறந்து உடலில் ஊற்றி, ‘புரட்சிதலைவி அம்மா வாழ்க' என்று கோஷமிட்டபடி தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மற்ற போலீஸ்காரர்கள் விரைந்து வந்து அவரை தடுத்து காப்பாற்றினர். அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் போலீஸ்காரர் வேல்முருகன் மீது தண்ணீரை ஊற்றினார்கள்.

பின்னர் வேல்முருகனை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று சோதனைகளை முடித்துவிட்டு, மயிலாப்பூர் காவல் நிலையத் துக்கு அழைத்து சென்றனர்.

விளையாட்டுத் துறையில் ஆர்வமிக்க வேல்முருகன், போலீஸ் சார்பில் பல்வேறு விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். முதல்வ ராக ஜெயலலிதா இருந்தபோது அவரிடம் இருந்து நேரடியாக பரிசுகளும் பெற்றுள்ளார். இதனால் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டதை தாங்க முடி யாமல் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மற்றொருவரும் தீக்குளிக்க முயற்சி:

ஜெயலலிதா கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னை கோயம்பேட்டில் அதிமுக சார்பில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட கண்ணன்(32) என்ற அதிமுக தொண்டர் மேடையின் அருகே நின்றுகொண்டு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். ஆனால் தீ வைப்பதற்கு முன்பே அருகே இருந்தவர்கள் அவரை காப்பாற்றி விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x