போஸ்டர் பிரச்சினையில் மழுப்பல்: அழகிரி சமாதான முயற்சி?

போஸ்டர் பிரச்சினையில் மழுப்பல்: அழகிரி சமாதான முயற்சி?
Updated on
1 min read

திமுக தலைவர் கருணாநிதியை மு.க. அழகிரி இன்று சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பின் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

அப்போது அவர், சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை மதுரையில் ஒட்டியவர்கள் என் ஆதரவாளர்கள் இல்லை என மழுப்பலாக தெரிவித்தார்.

தேமுதிகவுடன் திமுக கூட்டணி வைப்பது குறித்து தொலைக்காட்சிப் பேட்டியில் விமர்சித்த அழகிரிக்கு கண்டனம் தெரிவித்த கருணாநிதி கட்சி கட்டுக்கோப்பை குலைக்க முயற்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அழகிரியின் ஆதரவாளர்களில் ஒருவர் என கூறப்படும் முபாரக் மந்திரி மதுரையில் ‘டோன்ட் ஒரி’ என்று ஆங்கிலத்தில் போஸ்டர் ஒட்டியிருந்தார். அன்பரசன் இளங்கோவன் ‘இனியொரு விதி செய்வோம்’ என போஸ்டர் ஒட்டியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மதுரை திமுக கழக பொறுப்பில் இருந்து 5 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டனர். நடவடிக்கைக்கு உள்ளான அனைவருமே அழகிரியின் ஆதரவாளர்கள். அழகிரியின் வலதுகரமான பி.எம்.மன்னனுடன் தீவிரமாக செயல்பட்டது, கட்சிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது வைக்கப்பட்டன. இத்தகைய சூழலில் இன்று கருணாநிதியை சந்தித்த அழகிரி, சர்ச்சைக்குரிய சுவரொட்டிகளை மதுரையில் ஒட்டியவர்கள் என் ஆதரவாளர்கள் இல்லை என தெரிவித்துள்ளார்.

போஸ்டர் பிரச்சினை குறித்து: "கவலையில் இருக்கும் மு.க.அழகிரிக்கு ஆறுதல் சொன்னால்கூட தப்பா?" என்று நீக்கப்பட்ட தி.மு.க.வினர் வருத்தம் தெரிவித்திருந்தனர் என்பது கவனிக்கத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in