

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் 1,777 இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ளன. ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் இந்த இடங்களில் சேர 3,736 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், கட் ஆப் மதிப்பெண் கடந்த 17-ம் தேதி வெளியிடப் பட்டது. விருப்பும் கல்லூரியை தேர்வுசெய்வதற் கான கலந்தாய்வு ஆகஸ்ட் 22 முதல் 30-ம் தேதி வரை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவ னத்தில் நடைபெறும் என்று அறி விக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கலந்தாய்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில், உடல் ஊனமுற்றோர், பார்வையிழந் தோர், முன்னாள் ராணுவத்தி னர் ஆகிய சிறப்புப் பிரிவின ருக்கும், எஸ்டி வகுப்பினருக்கும் கலந்தாய்வு நடந்தது. தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை கல்லூரி கல்வி இணை இயக்குநர் (நிதி) கே.சேகர் வழங்கினார். அப் போது, தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளர் பேரா சிரியை எம்.எஸ்.தில்லை நாயகி உடனிருந்தார். முதல் நாள் கலந்தாய்வில் 129 பேருக்கு ஒதுக் கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இன்று நடைபெறும் கலந்தாய் வில் தமிழ், ஆங்கில பாட மாண வர்கள் கலந்துகொள்கிறார்கள்.