

திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘சென்னை வடக்கு மாவட்டம் ராயபுரம் கிழக்கு பகுதிச் செயலாளர் கட்பீஸ் அ.பழனி, ஆர்.கே.நகர் கிழக்கு பகுதிச் செயலாளர் வெ.சுந்தரராஜன் ஆகியோர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இரா.செந்தில் (ராயபுரம் கிழக்கு), என்.மருதுகணேஷ் (எ) என்.எம்.கணேஷ் (ஆர்.கே.நகர் கிழக்கு) பகுதி பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கட்சி நிர்வாகிகள் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
நடந்த முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளில் தோல்வி அடைந் தது. அதைத் தொடர்ந்து பகுதிச் செயலாளர்கள் 2 பேர் நீக்கப் பட்டுள்ளனர். தேர்தல் தோல்வி யைத் தொடர்ந்து திமுகவில் இதுவரை கோவை மாநகர் வடக்கு, நாமக்கல் கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, தூத்துக் குடி வடக்கு, நாகை வடக்கு, நாகை தெற்கு ஆகிய 6 மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள் ளனர். இதுதவிர ஒன்றிய, நகர, பேரூர், பகுதி, வட்டச் செயலா ளர்கள், மாவட்ட நிர்வாகிகள் பலரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக் கையின் தொடர்ச்சியாக சென்னை மாநகரில் பகுதிச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.