

தொலைதூரக்கல்வி படிப்புகளில் சேர இன்று (புதன்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை பல்கலைக்கழகப் பதிவாளர் பா.டேவிட் ஜவகர் நேற்று வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் இளங்கலை, முதுகலை, தொழிற்கல்வி, சான்றி தழ், டிப்ளமா படிப்புகளில் 2016-2017-ம் கல்வி ஆண்டில் சேருவதற்கு 20-ம் தேதி (இன்று) முதல் விண்ணப்பிக்கலாம். மாணவர் சேர்க்கைக்காக சனி, ஞாயிறு உட்பட அனைத்து நாட்க ளிலும் செயல்படும் ஒற்றைச் சாளர மாணவர் சேர்க்கை மையத்தை மாணவர்கள் அணு கலாம். இந்த மையம், சேப் பாக்கத்தில் உள்ள பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி நிறுவனத்தில் இயங்குகிறது. கூடுதல் விவரங் களை தொலைதூரக்கல்வி நிறுவன தகவல் மையத்திலோ அல்லது www.ideunom.ac.in என்ற இணைய தளத்திலோ தெரிந்து கொள்ளலாம்.