Published : 14 Feb 2017 08:04 AM
Last Updated : 14 Feb 2017 08:04 AM

பாஜக அரசின் கெடுபிடி தந்திரத்தில் ஆளுநரும் அகப்பட்டுள்ளாரா? - தமிழகத்தில் நிலையான அரசு உடனே அமைக்க வேண்டும்: திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு தீர்மானம்

தமிழகத்தில் நிலையான அரசை அமைக்க ஆளுநர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் - சசிகலா இடையே மோதல் ஏற்பட்டு தமிழக அரசிய லில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

சுமார் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன் மைச் செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் கனிமொழி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஐ.பெரிய சாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம்:

யார் முதல்வர் என்பது தொடர் பாக ஆளுங்கட்சிக்குள் அதிகாரப் போட்டி நிலவுகிறது. இதனால் மாநிலத்தில் அமைதியற்ற சூழல் உருவாகி அரசியல் சட்டரீதியாக பெரும் நெருக்கடியை தமிழகம் சந்தித்துக் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் முதல்வரும் இல்லை. காபந்து அரசுதான் உள்ளது. கடந்த 5-ம் தேதி ஓபிஎஸ்- ஸின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்தார். ஆனால், இன்றுவரை ஒரு நிலை யான அரசை அமைக்க முன் வராமல் தாமதம் செய்து வருகிறார்.

ஏற்கெனவே 9 மாதங்கள் முடங்கி யுள்ள அரசின் நிர்வாக சக்கரம் இன்று முழுவதுமாக நிலை குலைந்து நிற்கிறது. தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான ஆலோசனைக் கூட் டங்கள் இதுவரை நடைபெற வில்லை. ஏற்கெனவே, ரூ.5 லட்சம் கோடி கடனில் தத்தளிக்கும் மாநில அரசின் நிதி நிர்வாகம் இதனால் பெரும் நெருக்கடிக்கு ஆளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், நிலையான அரசு அமைக்க மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் மத்திய பாஜக அரசின் கெடுபிடி தந்திரத்தில் ஆளுநரும் அகப்பட்டு கொண்டிருக்கிறாரோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. எனவே, இனியும் காலதாமதம் செய்யாமல் அரசியல் சட்ட விதிகள், மரபுகளுக்கு உட்பட்டு உடனடியாக நிலையான ஆட்சி அமைக்க ஆளுநர் நட வடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதவிர, திமுக செயல் தலை வர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு களுக்கு பாராட்டு, ஜல்லிக்கட்டு தடையை நீக்க போராடிய மாணவர் களுக்கு பாராட்டு, ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கும் தமிழக அரசின் சட்ட மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும், வார்தா புயல், வறட்சி நிவாரண நிதியா மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும், விவசாயி களின் கடன்களை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளிடம் ஜப்தி நடவடிக்கையை கைவிட வேண்டும், உதய் மின் திட்டத்தால் இலவச மின்சாரத்துக்கு எந்த பாதிப்பும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும், உள்ளாட்சித் தேர்தல் உடனே நடத்த வேண்டும் ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x