

நெய்வேலி மந்தாரக்குப்பம் நகைக் கடையில் சுரங்கப் பாதை அமைத்து நகைகளை கொள்ளை யடித்தது வட மாநில கும்பலா என்பது குறித்து 6 தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெய்வேலி மந்தாரக்குப்பத் தில் உள்ள கடலூர் - விருத்தா சலம் மெயின் ரோட்டில் நகைக் கடை நடத்தி வருபவர் சுரேஷ்(34). இவர் நெய்வேலி இந்திரா நகரில் வசித்து வருகி றார்.
கடந்த10-ம் தேதி இரவு சுரேஷ் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் காலையில் கடை யின் காசாளர் உமாபதி கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் ஷட்டர் திறந்து கிடந்தது. பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தன.
கடையின் பின்புறத்தில் சுரங்கப் பாதை தோண்டப்பட் டிருந்தது தெரிய வந்தது. உள்ளே கடையில் இருந்த ஒன்றரை கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகள் கொள்ளை யடிக்கப்பட்டிருந்தன. இந்த நகை களின் மதிப்பு ரூ.60 லட்சம்.
இதுகுறித்து சுரேஷ் மந்தாரக் குப்பம் போலீஸில் புகார் செய் தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடலூர் எஸ்பி விஜயகுமார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். மேப்ப நாய் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்களும் கைரேகை மற்றும் பல்வேறு தடயங்களை சேகரித்து சென்றுள் ளனர். நகைக்கடையில் கொள் ளையில் ஈடுபட்டவர்கள் கண் காணிப்பு கேமராவை உடைத் துள்ளனர்.
மேலும் 2 கேமராக்களை கருப்புத் துணியால் மூடியுள்ளனர். இதனால் அவர்கள் கைதேர்ந்த குற்றவாளிகள் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. நகைக் கொள்ளையர்கள் திட்டமிட்டு சுரங்கம் தோண்டி யிருப்பதால் இந்த இடத்தை நன்கு நோட்டமிட்டே இதை செய்திருக்க வேண்டும் என்றும், இந்தக் கொள்ளையை வட நாட்டு கொள்ளையர்கள் செய்தி ருக்கலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த கொள்ளையில் ஈடுபட்ட வர்களை பிடிக்க எஸ்பி விஜய குமாரின் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி ராமசாமி தலைமை யில் 6 தனிப்படைகள் அடைக் கப்பட்டுள்ளன.