அவிநாசி அருகே முதல்வர், சபாநாயகர் பேனர்கள் கிழிப்பு

அவிநாசி அருகே முதல்வர், சபாநாயகர் பேனர்கள் கிழிப்பு
Updated on
1 min read

அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோரது படங்கள் அடங்கிய பேனர்கள் கிழிக்கப்பட்டன.

அவிநாசியில் இன்று (திங்கள்கிழமை) இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிறிய திருக்கோயில் அர்ச்சகர்களுக்கு பூஜை உபகரணங்கள் வழங்குதல் மற்றும் கிராமப்புற மற்றும் ஆதிதிராவிடர் மசூதி திருக்கோயில்களுக்கு திருப்பணி நிதியுதவி வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதனையொட்டி, அவிநாசி அருகே முதல்வர் பழனிசாமி, சபாநாயகர் தனபால் ஆகியோரது படங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த பேனர்களை சில மர்ம நபர்கள் கிழித்தெரிந்தனர். பேனர்களில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை மட்டும் விட்டுவிட்டு முதல்வர், சபாநாயகர் இருந்த பகுதி கிழிக்கப்பட்டுள்ளது.

பேனர்களை கிழித்தது யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in