மெரினாவில் பிஹார் இளைஞர் குத்திக் கொலை

மெரினாவில் பிஹார் இளைஞர் குத்திக் கொலை
Updated on
1 min read

மெரினா கடற்கரையில் குடிசை மாற்று வாரிய அலுவலகம் எதிரில் மணல் பரப்பில் இளைஞர் ஒருவர் கத்திக்குத்து காயங்களுடன் நேற்று காலை 7 மணிக்கு சடலமாக கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த மெரினா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மோகன் தாஸ் தலைமையிலான போலீஸார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோத னைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸாரின் விசாரணையில் சடலமாக கிடந்தவரின் பெயர் நூர்ஹுசேன் அன்சாரி (21) என்பதும், பிஹாரை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. நூர்ஹுசேன் அன்சாரி தனது அண்ணன் அகமது ஹுசேனுடன் ஐஸ்ஹவுஸ் பகுதியில் தங்கி இருந்துள்ளார்.

நுங்கம்பாக்கத்தில் டெய்லர் கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன் தினம் இரவு பணி முடித்து வீடு திரும் பாத நிலையில், நேற்று காலை சடலமாக கிடந்துள்ளார். கொலையாளி யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என தனிப்படை போலீஸார் விசாரிக்கின்றனர்.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை தொடர்ந்து வரும் 12-ம் தேதி வரை மெரினாவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில், அங்கு பிஹார் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in