குப்பை கிடங்கால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உறுதி

குப்பை கிடங்கால் ஏற்படும் பாதிப்பு தடுக்கப்படும்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் உறுதி
Updated on
1 min read

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் ஆர்.கே.நகர் தொகுதி மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க பாடுபடுவேன் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் லோகநாதன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட் பாளராக லோகநாதன் அறி விக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த சில தினங்களாக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். நேற்று கொடுங்கையூர் எழில்நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று பொதுமக்க ளிடமும், அங்குள்ள தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடமும் அவர் வாக்கு சேகரித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:

கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் இப்பகுதி மக்கள், பல்வேறு நோய்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு வருகிறது. மேலும் இப்பகுதி யில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை. எனவே என்னை வெற்றிபெறச் செய்தால், இப்பகுதியில், கொடுங்கையூர் குப்பைக் கிடங்கால் ஏற்படும் பாதிப்பு களைத் தடுக்கவும், குடிநீர் பிரச்சினையை போக்கவும் பாடுபடுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in