Published : 01 May 2014 09:15 AM
Last Updated : 01 May 2014 09:15 AM

கடல் வழியாக தீவிரவாதிகள் சென்னைக்குள் ஊடுருவ திட்டம்: தீவிரவாதி வாக்குமூலம்

ஜாஹீர் உசேன் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்ப தாவது: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகளை கடல் வழியாக இலங்கைக்கு அழைத்து வந்து அங்கிருந்து தமிழகத் துக்கு அனுப்பி வைக்க திட்ட மிட்டிருந்தோம். இதற்காக இலங் கையில் இருந்தபடியே சதி திட்டங் களை தீட்டி சென்னைக்கு வந்து இடங்களை பார்த்து சென்றேன்.

சென்னை மற்றும் பெங்களூரில் குண்டு வெடிப்பு சம்பவங்களை அரங்கேற்றுவதற்காக இலங்கை யில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவர் என்னிடம் பேசி சம்மதிக்க வைத்தார். இதற்கு லட்சக்கணக்கில் பணம் தருவதாக கூறினார். முதல்கட்டமாக எனக்கு தீவிரவாதிகளை சென்னை மாநகருக்குள் அழைத்து வந்து தங்க வைப்பதற்கு ஏற்பாடு செய்யும் பணி ஒதுக்கப்பட்டன.

இதற்கு முன்பாக கள்ள நோட்டு களை மாற்றிக் காட்டும் பரீட்சையும் எனக்கு வைக்கப்பட்டது. இதன்படி பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட இந்திய 1000 மற்றும் 500 ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நான் கடந்த 18 ந்தேதி சென்னைக்குள் ஊடுரு வினேன். இதை மாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டபடியே தீவிரவாதிகளை எப்படி அழைத்து வருவது என்பது பற்றியும் நான் ஒத்திகை பார்த்தேன்.

கள்ளத் தோணிகள் மூலம் கடல் வழியாக மீனவர்கள் போல தீவிர வாதிகளை சென்னைக்குள் ஊடுருவ வைப்பதற்கு திட்டம் போட் டிருந்தேன். இப்படி வருபவர் களை தங்க வைப்பதற்காக இங்குள்ள சிலரது உதவியுடன் வாட கைக்கு வீடும் பார்த்து வந்தேன். எங்கெங்கு குண்டு வைப்பது? எப்படி செயல்படுத்து வது? என்பது பற்றி எல்லாம் ஆராய்ந்து வைத்திருந்தோம். ஆனால் அதற்குள் சிக்கிக் கொண் டேன். இவ்வாறு ஜாஹீர் உசேன் வாக்குமூலத்தில் கூறியிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் மத்திய உளவுப் பிரிவு போலீஸார் தமிழ கத்துக்கு ஒரு எச்சரிக்கை தகவல் அனுப்பி இருந்தனர். அதில் கடல் வழியாக புகுந்து தீவிரவாதிகள் அணு உலையை தாக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டு இருந்தது. இப்போது ஜாஹீர் கைது செய்யப் பட்டிருப்பதைத் தொடர்ந்து கல்பாக் கம், கூடங்குளம் அணுமின் நிலை யங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. கடலோர மாவட்டங் களில் பாதுகாப்புப் படையி னர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x