

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நேற்று வெளி யிட்ட அறிக்கை:
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் இரு மசோதாக்கள் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 31-ம் தேதி நிறை வேற்றப்பட்டு குடியரசுத் தலை வரின் ஒப்புதலுக்காக அனுப் பப்பட்டுள்ளது. 10 நாட்கள் ஆகி யும் எந்த முடியும் எடுக்கப் படாமல் நிலுவையில் உள்ளது.
தமிழக ஆட்சியாளர்களும் அதுகுறித்து எந்த நட வடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை. தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு சிபிஎஸ்இ பாடத் திட்டத்தின் படி நடைபெறுவதால் மாநில பாடத்திட்டத்தின்படி படித்த 8 லட்சம் மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள். இதில் பெரும்பாலானவர்கள், கிராமப்புறத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட ஆதிதிராவிட, பின்தங்கிய சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய பாடத் திட்டத்துக்கும், மாநில பாடத் திட்டத்துக்கும் அடிப்படையில் வேறுபாடுகள் இருப்பதால் இரண்டையும் சமநிலைத் தன் மையுடன் பார்ப்பது சமூக நீதிக்கு எதிரானது.
ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வருவதற்கு எத்தகைய தீவிர முயற்சிகளை மேற்கொண்டதோ, அதே அளவுக்கான முயற்சிகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். பிரதமரை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும். தமிழகத்தின் அசாதாரண சூழலில் தமிழக மாணவர்கள் வஞ்சிக்கப்படுவதை தடுத்து நிறுத்த உரிய நட வடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.