

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக் கோட்டையில் திமுக நகரப் பொறுப்பாளர் நேற்று மாலை வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
பட்டுக்கோட்டை சுண்ணாம்புக் காரத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன்(50). திமுக நகரப் பொறுப்பாளர். இவர், சாந்தாங் காடு மீன் மார்க்கெட் அருகே நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தார். அப்போது, ஒரு கும்பல் மனோகரனை வழி மறித்து, அரிவாளால் வெட்டி விட்டு, தப்பி ஓடியது. இதில் பலத்த காயமடைந்த மனோ கரன், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து, கொலையாளிகளைத் தேடி வருகின்றனர்.