

ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் 20 பேர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா வெளியிட்ட அறிவிப்பில், '' கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்துக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் 20 பேர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
20 பேர் பட்டியல்
ஓ.பன்னீர்செல்வம், பொன்னையன், பி.எச்.பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, மாஃபா பாண்டியராஜன், ப.மோகன், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர், தவசி, ஜெயபால், செல்வம், ராஜேந்திர பிரசாத், முகில், பரிதி இளம்வழுதி, பொன்னுசாமி, நீலகண்டன், ஐயப்பன், முத்துராமலிங்கம், முத்துச்செல்வி ஆகியோர் இன்று முதல் கழகத்தின் அடிப்பை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்'' என சசிகலா கூறியுள்ளார்.