

சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வேட்பாளர்கள் செலவுக் கணக்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே மாதம் 16-ம் தேதி நடந்தது. முன்னதாக, மே 3-ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான முதல் வேட்பாளர்கள் செலவழிக்கும் தொகையை தேர் தல் ஆணையத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். ஒரு வேட்பாளர் அதிக பட்சமாக ரூ.28 லட்சம் வரை மட்டுமே செலவழிக்க முடியும். அதற்கு மேல் செல்லும் பட்சத்தில் தகுதியிழக்க நேரிடும் என்பதால், வேட்பாளர்கள் முறையாக கணக்கு மற்றும் அதற்கான ரசீதுகளை பராமரிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இறுதி தேர்தல் செலவின கணக்கை, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு சமர்ப்பித்த வேட் பாளர்களின் கணக்குகள், தணிக்கை செய்யப்பட்டு, இறுதி கணக்கை தமிழக தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஆர்.கே. நகரில் போட்டியிட்ட ஜெயலலிதா ரூ.24 லட்சத்து 55 ஆயிரத்து 651 செலவு செய்துள்ளார். திருவாரூரில் போட்டியிட்ட மு.கருணாநிதி ரூ.19 லட்சத்து 12 ஆயிரத்து 880-ம், சென்னை கொளத்தூரில் போட்டி யிட்ட மு.க.ஸ்டாலின் ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 840-ம் தேர்தலுக்காக செலவழித்துள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தான் போட்டியிட்ட விருகம்பாக் கம் தொகுதியில் ரூ.11 லட்சத்து 2 ஆயிரத்து 877-ம், உளுந்தூர் பேட்டையில் போட்டியிட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரூ.16 லட்சத்து 70 ஆயிரத்து 90-ம் செலவழித்ததாக கணக்கு அளித் துள்ளனர்.
பென்னாகரத்தில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் ரூ.19 லட்சத்து ஆயிரத்து 871-ம், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் களம் கண்ட விடு தலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ரூ.15 லட்சத்து 60 ஆயிரத்து 985-ம் தேர்தலுக்காக செலவழித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேர்தலுக்காக வேட்பா ளர்களுக்கு நன்கொடையாகவும், வேறு வகையிலும் வந்த தொகைக் கான விவரங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.