‘தி இந்து’ சார்பில் சென்னை தினப் பாடல் வீடியோ வெளியீடு

‘தி இந்து’ சார்பில் சென்னை தினப் பாடல் வீடியோ வெளியீடு
Updated on
1 min read

‘தி இந்து’ சார்பில் தயாரிக் கப்பட்டுள்ள சென்னை தினப் பாடல் வீடியோ வெளியிடப் பட்டுள்ளது.

‘தி இந்து’ குழுமம் சார்பில் சென்னை தினத்தை முன்னிட்டு, சென்னையை இன்றைய இளைய தலைமுறை எப்படி பார்க்கிறார்கள் என்பதை காட்சிப்படுத்தும் வகையில் இசைப் பாடலுடன் கூடிய வீடியோ ஒன்றைத் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக ‘மெட்ராஸ் பீட்ஸ் 2016’ என்ற தலைப்பில் போட்டி ஒன்றை அண்மையில் நடத்தியது. அதில் சென்னையைச் சேர்ந்த பல்வேறு மியூசிக் பேன்டு குழுவினர் பங்கேற்று, தங்கள் படைப்புகளை அனுப்பியிருந்தனர். அதில் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் குழுவான ஓபஸ் ஜி7 என்ற குழு தேர்வு செய்யப்பட்டது.

‘தி இந்து’ சார்பில், அந்தக் குழுவுக்கு பாடல் எழுதவும், இசை அமைக்கவும், பாடல்களைப் பாடவும், அது சார்ந்த வல்லுநர் மூலம் தக்க ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் மூலம் அக்குழு சென்னை தினப் பாடலை உருவாக்கியுள்ளனர். இது 2 நிமிடம் 37 விநாடிகள் வரை ஓடக்கூடியது. இதில் சென்னையின் முக்கிய இடங்கள், மக்களின் வாழ்க்கை முறை உள்ளிட்டவை காட்சிகளாக இடம்பெற்றுள்ளன. இதை ‘தி இந்து’ தமிழ் இணையதளம், ஃபேஸ்புக் பக்கம், யூடியூப் போன்றவற்றில் பார்த்து ரசிக்கலாம்.

மகிழ்ச்சி அளிக்கிறது

ஓபஸ் ஜி7 குழுவினர் கூறும்போது, “சென்னை தினப் பாடலை உருவாக்க, ‘தி இந்து’ குழுமம் எங்களுக்கு வாய்ப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. வளரும் தலைமுறையினரான எங்களுக்கு இதுபோன்ற வாய்ப்புகள் கிடைப்பது அரிது” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in