சென்னையில் வேகமாக பரவிய வன்முறை: பல இடங்களில் மக்கள் மறியல்: போக்குவரத்து முடக்கம்

சென்னையில் வேகமாக பரவிய வன்முறை: பல இடங்களில் மக்கள் மறியல்: போக்குவரத்து முடக்கம்
Updated on
3 min read

பெட்ரோல் குண்டு, கல்வீச்சில் 110 போலீஸார் காயம்

மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் அப்புறப்படுத்திய நிலையில், திருவல்லிக் கேணி உள்ளிட்ட பல பகுதிகளில் திடீரென வன்முறை வெடித்தது. போலீஸாரும் வன்முறையாளர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர்.

ஐஸ் அவுஸ் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஒரு கும்பல் தீ வைத்து எரித்தது. இத னால், காவல் நிலையத்திலும் தீ பற் றிக் கொண்டது. அதைத் தொடர்ந்து திருவல்லிக்கேணி, அரும்பாக்கம், எழும் பூர் உட்பட பல இடங்களில் போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன. இரு சக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

ஒரு வாரமாக அமைதியாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு போராட்டம், சிலரால் திடீரென வன்முறைக் களமாக மாறியது. இந்த வன்முறை சம்பவங்கள் மற்றும் மறியலால் சென்னை முழுவதும் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. மாநகர பேருந்துகள் நிறுத்தப்பட்டன. பறக்கும் ரயில் சேவையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.

மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் முற்றிலுமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மெரினாவுக்கு வரும் சாலைகள் அனைத்தையும் போலீஸார் தடுப்புகள் அமைத்து தங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அண்ணா சாலை, நெல்சன் மாணிக்கம் சாலை, பழைய மாமல்லபுரம் சாலை (ஓஎம்ஆர்), ஜவஹர்லால் நேரு சாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை, ஜி.எஸ்.டி சாலை உட்பட நகரின் பல பகுதிகளில் மறியல் காரணமாக போக்குவரத்து முடங்கியது. இந்த பகுதிகளில் வாகனங்கள் பல கி.மீ. தூரம் அணிவகுத்து நின்றன.

நடுக்குப்பத்தில் அதிக பாதிப்பு

மெரினாவில் இருந்து வெளியே வந்த வன்முறையாளர்கள், மயிலாப்பூர் நடுக்குப்பம் பகுதியில் நுழைந்தனர். இங்குதான் அதிகமான அளவில் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். இதில் அங்கிருந்த மீன் சந்தை கடைகள் முற்றிலும் எரிந்து நாசமானது. சுமார் 50 குடிசைகளும் தீயில் நாசமாகின. தொடர்ந்து அந்தப் பகுதி பதற்றமாகவே உள்ளதால், அங்கு ஏராளமான போலீ ஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

110 போலீஸார் காயம்

சென்னையில் நேற்று நடந்த மோதலில் கூடுதல் காவல் ஆணையர் தர், காவல் அதிகாரிகள் உட்பட 110 போலீஸார் காயம் அடைந்தனர். இதில் 10 பேரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. காயம் அடைந்தவர்களில் 27 பேர் பெண் போலீஸார். காயம் அடைந்த பல போலீஸார், காயங்களுக்கு கட்டு போட்டுக்கொண்டு மீண்டும் பாதுகாப்பு பணிக்கு வந்தனர். நடுக்குப்பம் பகுதியில் நடந்த மோதலில்தான் அதிகமான போலீஸார் காயம் அடைந்தனர்.

லத்தியை எடுக்காத போலீஸார்

மெரினாவில் போராட்டக்காரர்களை கலைப்பதற்காக சென்ற போலீஸார், கையில் லத்தி போன்ற எந்த ஆயுதமும் இல்லாமல் சென்றனர். யாரும் லத்தியை கையில் எடுக்கவும் கூடாது, அவரவர் வாகனங்களில் வைத்து விட்டு போராட்ட களத்துக்கு வரும்படி அதிகாரிகளும் உத்தரவிட்டு இருந்தனர். போராட்டக்காரர்களிடம் போலீஸார் அமைதியான முறையிலேயே பேச்சு வார்த்தை நடத்தினர். கலைந்து செல்லும் படி பலமுறை கெஞ்சவும் செய்தனர். சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதை தொடர்ந்தே, போலீஸாரும் தடியடி நடத்தினர்.

27 வாகனங்களுக்கு தீ

வன்முறையில் காவல் துறைக்கு சொந்தமான 2 வேன்கள், 4 ஜீப்புகள், 7 பைக்குகளுக்கு தீ வைக்கப்பட்டது. மேலும், தீயணைப்பு துறைக்கு சொந்த மான ஒரு வாகனமும் எரிக்கப்பட்டது. ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் வைக் கப்பட்ட தீயில் பல்வேறு வழக்குகளில் சிக்கிய சுமார் 13 பைக்குகள் எரிந்து சேதம் அடைந்தன.

களத்தில் நின்ற போலீஸார்

கூடுதல் ஆணையர்கள் சங்கர், ஸ்ரீதர், இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்னை முழுவதும் வன்முறை சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்தனர்.

கடலுக்குள் இறங்கி போராட்டம்

மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டி ருந்தவர்களிடம் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதாலும், அதன் அடிப்படையில் சட்டப்பேரவையில் சட்டமுன்வடிவு கொண்டு வருவதாலும் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்லும்படி காவல் துறையினர் தெரிவித்தனர். சட்ட முன் வரைவு குறித்து தங்களது வழக்கறிஞர் களிடம் ஆலோசனை நடத்திவிட்டு போராட்டத்தை கைவிடுகிறோம். அதற்கு ஒருநாள் அவகாசம் வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கேட்டனர். காவல் துறையினர் அதை ஏற்கவில்லை. போராட் டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தி யதால் அவர்கள் கடலை நோக்கிச் சென்றனர். கடலுக்கு மிக அருகில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கண்ணகி சிலை வரை மனித சங்கிலி போல நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் கடலுக்குள் இறங்கி நின்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடல் வழியாக உணவு, குடிநீர்

மனித சங்கிலி போல நின்றிருந்த போராட்டக்காரர்களுக்கு கடற்கரையில் இருந்து தண்ணீர் பாட்டில்கள், உணவு எடுத்துச் செல்ல யாரையும் போலீஸார் அனுமதிக்கவில்லை. அதனால், குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்ட போராட்டக் காரர்கள் கடற்கரை மணலைத் தோண்டி தண்ணீர் எடுக்க முற்பட்டனர். இதற் கிடையே சிலர் கடல் வழியாக சிறிய படகு மற்றும் கட்டுமரத்தில் தண்ணீர் பாக்கெட்கள், உணவு எடுத்து வந்து கொடுத்தனர்.

சாலைகள் மூடல்

அதிகாலை 5 மணி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல யாரையும் போலீ ஸார் அனுமதிக்கவில்லை. கடற்கரைக்கு செல்லும் வாலாஜா சாலை, சிவானந்தா சாலை, பாரதி சாலை, லாயிட்ஸ் சாலை, பெசன்ட் சாலை உட்பட அனைத்து இணைப் புச் சாலைகளிலும் போலீஸார் தடுப்புகள் அமைத்து யாரையும் அனுமதிக்கவில்லை. மெரினா மற்றும் அதனுடன் இணை யும் அனைத்து சாலைகளும் போலீ ஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டன. இதனால் காலையில் குழந்தை களை பள்ளிக்கு அழைத்துச் சென்றவர் களும், அலுவலகம் சென்றவர்களும் சிரமப்பட்டனர். கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களும் அனுமதிக்கப்பட வில்லை.

போராட்டக்காரர்களை அப்புறப்படுத்து வதற்காக மெரினா கடற்கரை சாலை யில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத் தப்பட்டது. இருசக்கர வாகனங்கள் மட் டும் அனுமதிக்கப்பட்டன. கடற்கரை சாலையில் சந்தேகத்துக்கு இடமான வர்கள் அனுமதிக்கப்படவில்லை. அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அடையாள அட்டையை காண்பித்த பிறகே அனுமதிக்கப்பட்டனர். போராட்டக்காரர்களை அப்புறப்படுத்திய தாலும், போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டதாலும் மெரினா கடற்கரை சாலை வெறிச்சோடி காணப்பட்டது.

போலீஸாரை தடுத்த தேசிய கீதம்

விவேகானந்தர் இல்லம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்தத் தொடங்கினர். அதற்கு மாண வர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் தள்ளுமுள்ளும், பரபரப்பும் ஏற்பட்டது. சில மாணவர்கள் போலீஸாரின் நட வடிக்கையை தடுக்கும் வகையில் தேசிய கீதத்தை பாடினர். அப்போது, மாணவர் களை போலீஸார் அப்புறப்படுத்தாமல் அப்படியே நின்று விட்டனர்.

ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டையில் போராட்டக்காரர்கள் கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் சாலையின் நடுவே போட்டு தீவைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து அங்கு அதிரடிப்படை போலீஸார் விரைந்து சென்றனர். அவர்களை நோக்கி இளைஞர்கள் கற்களை வீசினர். இத னால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்களுக்கும் அதிரடிப் படையினருக்கும் இடையேயான மோதல் தீவிரம் அடையவே அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் உட்பட சென்னையில் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன.

போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நொச்சிக் குப்பம், சிந்தாதிரிப்பேட்டை மற்றும் சில பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் சேர்ந்துகொண்டனர். போராட்டக்காரர் களுடன் சேர்ந்து மீனவர்களும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்கினர். சில பெண்கள் போலீஸார் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் மீனவர்கள் மீதும் போலீஸார் தடியடி நடத்தினர்.

ஹெலிகாப்டரில் ரோந்து

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டக்காரர் கள் விவேகானந்தர் இல்லம் எதிரே திரண்டு இருந்தனர். இவர்களை ஹெலிகாப்டர் மூலம் கடலோர காவல் படையினர் கண்காணித்தனர். 7 முறை இந்த ஹெலிகாப்டர் ரோந்து சுற்றி வந்தது. அதேபோல் கப்பல் மூலமும் கண்காணித்தனர்.

பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்

போலீஸார் நடத்திய தடியடி குறித்த செய்திகளை சேகரிக்கவும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்காக ஏராளமான பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். போலீஸார் தடியடி நடத்தியபோது இவர்களும் சம்பவ இடத்தில் இருந்தனர். அப்போது சில பத்திரிகையாளர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. மேலும், 20 பத்திரிகையாளர்கள் போலீஸ் தடியடியில் காயம் அடைந்தனர். பத்திரிகை யாளர்களின் பைக்குகளையும்போலீஸார் அடித்து உடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in