Published : 01 Sep 2016 08:12 AM
Last Updated : 01 Sep 2016 08:12 AM

எஸ்.சி., எஸ்.டி. பள்ளிகளில் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி: அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவிப்பு

ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் நல தொடக்கப் பள்ளி களில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என்று பேரவை யில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு ஆதிதிரா விடர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி பதில் அளித்ததுடன் புதிய அறிவிப்பு களையும் வெளியிட்டார். அதன் விவரம்:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் அறிவுத் திறன், பேச்சாற்றல், ஆளுமைத் திறன் ஆகியவற்றை இளம் வயதில் இருந்தே வளர்த்துக்கொள்ள ஆங்கிலப் பயிற்சி அவசியம். மாணவர்கள் சரளமாக ஆங் கிலத்தில் பேசுவதற்கும், எழுது வதற்கும் தங்களைத் தகுதிப் படுத்திக்கொள்ளும் வகையில் 10 ஆயிரத்து 299 மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.30 செலவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். இத்திட் டத்தை செயல்படுத்த ரூ.34 லட்சம் மத்திய சிறப்புத் திட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின ஓட்டுநர்கள் சுயமாக வேலைவாய்ப்பைப் பெறவும், அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளவும், திறன் களை வளர்க்கவும் உரிமம் பெற்றுள்ள சுமார் 960 ஓட்டு நர்களுக்கு மோட்டார் வாகனப் பயிற்சி அளிக்கப்படும். இப் பயிற்சிக்கான நிதி ரூ.1 கோடியே 11 லட்சம் தாட்கோ சிறப்பு மைய திட்டம் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டத்தில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

பசுந்தேயிலை

நீலகிரி மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினர் பாரம் பரிய வேளாண்மை தொழிலைத் தொடர, அங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலையை பதப்படுத்தவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் கோத்தகிரி வட்டாரத்தில் உள்ள கோழித்துறையில் பசுந்தேயிலை தயாரிக்கும் இயந்திர அலகு அமைக்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.80 லட்சம் சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x