

அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக வரும் பிப்ரவரி மாத இறுதியில், தமிழகத்துக்கு வருவார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் கூறியுள்ளார்.
நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விரைவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, மக்கள் நலன் சார்ந்த பல்வேறு மசோதாக்களை நிறை வேற்ற உள்ளது. தகவல் வெளிக் கொண்டு வருவோர் மற்றும் புகார் அளிப் போர் பாதுகாப்புச் சட்டம், வெளிநாட்டு அதிகாரிகளுக்கான ஊழல் தடுப்புச் சட்டம், பொதுக் கொள்முதல் கட்டுப்பாடு மற்றும் வெளிப்படைத் தன்மைக்கான உறுதிச் சட்டம், குடிமக்கள் உரிமைச் சட்ட மசோதா உள்ளிட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட் டுள்ளன. குடிமக்கள் உரிமைச் சட்டப்படி, குடிமக்கள் தங்களுக்கு அடிப்படைத் தேவையான குடும்ப அட்டை, பாஸ்போர்ட், அரசு சான்றிதழ்கள் போன்றவற்றை எந்த தாமதமுமின்றி பெற முடியும்.
இந்தச் சட்ட மசோதாக் களை நிறைவேற்றவும், நாடாளு மன்றத்தை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தர வலியுறுத்தியும் மாணவர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் படும்.
மாநிலங்க ளவைத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா என்பது குறித்து, 28ம் தேதி தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.