

சென்னைக்கு காய்கறி வரத்து குறை வால் அதன் விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.
கடந்த சில வாரங்களாக கோயம்பேட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்ததை அடுத்து, அவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இந்த வாரமும் பல காய்கறிகளின் விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது.
இது தொடர்பாக கோயம்பேடு மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி எம்.தியாகராஜனிடம் கேட்டபோது, “கடந்த ஒரு மாதமாக கடும் வெயில், அதனிடையே பலத்த மழை பெய்தது. இதனால் காய்கறி உற்பத்தி பாதிக்கப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்துள்ளது. அதனால் கடந்த சில வாரங்களாக காய்கறி விலை உச்சத்திலேயே இருந்து வருகிறது” என்றார்.