Published : 18 Aug 2016 07:46 AM
Last Updated : 18 Aug 2016 07:46 AM

நெல்லை மாவட்டம் பாளையங்கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க ரூ.290 கோடியில் பாதாளச் சாக்கடை: உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் டி.பி.எம்.மைதீன்கான் (பாளையங்கோட்டை) கொண்டு வந்த கவனஈர்ப்பு தீர்மானத்துக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த விளக்கம் வருமாறு:

பாளையங்கால்வாய் பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள் ளது. பாளையங்கோட்டை தொகுதி யில் மேலப்பாளையம், பாளையங் கோட்டை நகரங்களின் மக்கள் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள பாளையங்கால்வாயில் சாக்கடை கழிவுநீர் கலப்பதைத் தடுக்க அம்ரூத் 2016-17 திட்டத்தின் கீழ் ரூ.290 கோடி யில் பாதாளச் சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது.

மேலும், மேலப்பாளையம் மண் டல பகுதியில் தெருக்களின் பின் பகுதிகளில் இருந்து வாய்க்காலில் கலக்கும் கழிவுநீரை தடுக்க 12 தெருக்களில் 4.20 கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ.1 கோடியே 17 லட்சத் தில் கழிவு நீரோடைகள் கட்டும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. கூடுதலாக 34 தெருக்களில் 7.18 கிலோமீட்டர் நீளத்துக்கு ரூ.4 கோடியே 70 லட்சத்தில் கழிவு நீரோ டைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் 494 நிரந்தரப் பணியாளர்கள் மூலம் துப்புரவுப் பணி மேற்கொள்ளப் படுகிறது. சுகாதாரத்தை மேம் படுத்துவதற்காக கூடுதல் சுயஉதவிக் குழுக்கள் மூலம் 598 பணியாளர்களும் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தினசரி உற்பத்தியாகும் 180 மெட் ரிக் டன் குப்பை சேகரிக்கப்பட்டு ராமையன்பட்டி உரக்கிடங்கில் கொட்டப்படுகிறது. மேலப்பாளை யம் பகுதியில் மட்டும் தினசரி உற்பத்தியாகும் பீடிக் கழிவுகள் உள்ளிட்ட 60 மெட்ரிக் டன் குப்பை, வாகனங்கள் மூலம் அகற்றப் பட்டு பொது சுகாதாரம் பேணப் படுகிறது.

ராமையன்பட்டி உரக்கிடங்கில் சேகரிக்கப்படும் குப்பையை ரூ.8 கோடியே 16 லட்சத்தில் விஞ்ஞான முறையில் அப்புறப்படுத்தும் பணி முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த உரக்கிடங்கில் சேகரிக் கப்படும் குப்பையில் இருந்து மின் சாரம் தயாரிக்கும் பணிக் காக விரைவில் மறு ஒப்பந்தப் புள்ளி கோரப்பட உள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x