Published : 08 Oct 2014 10:36 AM
Last Updated : 08 Oct 2014 10:36 AM

மத்திய அமைச்சர்களின் சொத்துப்பட்டியல் வெளியீடு: பணக்கார அமைச்சர் அருண் ஜேட்லி; வெங்கய்ய நாயுடுவிடம் ரூ.20.45 லட்சம்

மத்திய அமைச்சர்களிலேயே பெரும் பணக்காரர் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜேட்லிதான். அவரின் சொத்து மதிப்பு ரூ. 72.10 கோடி. மத்திய அமைச்சர்களில் குறைவான சொத்து மதிப்பு உடையவர் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஆவார்.

மத்திய அமைச்சர்களின் சொத்துப் பட்டியல், பிரதமர் அலு வலக இணையதளத்தில் திங்கள் கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, நிதி மற்றும் பாதுகாப் புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லிதான் பெரும் பணக்காரர் ஆவார். அவரின் சொத்து மதிப்பு ரூ.72.10 கோடி ஆகும்.

மோடியிடம் ரூ. 1.26 கோடி

பிரதமர் நரேந்திர மோடியிடம் ரூ. 1.26 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. அவரிடம் ரூ. 38,700 ரொக்கம், வங்கியில் முறையே, ரூ. 1 லட்சத்து 32 ஆயிரத்து 698, ரூ. 17 லட்சத்து 927, பங்கு பத்திரங்கள் ரூ. 20,000, தேசிய சேமிப்பு பத்திரங்கள் ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம், ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 31-க்கு காப்பீடுகள், ரூ. 1 லட்சத்து 20 ஆயிரத்து 980-க்கு நகை உள்ளிட்ட விலைமதிப்பு மிக்க ஆபரணங்கள் உள்ளன. காந்திநகரில் ரூ. 1 கோடி மதிப்பில் வீடு உள்ளது.

மனைவியின் சொத்து விவரம் இல்லை

தனது மனைவி யசோதா பென்னிடம் உள்ள சொத்து விவரங்கள் குறித்து நரேந்திர மோடி எதையும் தெரிவிக்க வில்லை. அது தொடர்பான பக்கத்தில், ‘தெரியவில்லை’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

17 கோடீஸ்வரர்கள்

மொத்தமுள்ள 22 கேபினட் அமைச்சர்களில் மோடி உட்பட 17 பேர் கோடீஸ் வரர்கள்.

பெண் அமைச்சர்களில் மேனகா காந்திதான் பணக்காரர். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம் பாட்டு துறை அமைச்சர் மேனகா காந்தியின் சொத்து மதிப்பு ரூ. 37.68 கோடி. அவருக்கு அடுத்தபடியாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா ரூ. 29.70 கோடி சொத்து வைத்துள் ளார். நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் ரூ. 31.67 கோடி சொத்து உள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ஆகும். வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் ரூ.2.73 கோடி மதிப்புள்ள சொத்து களும், ஹரியாணாவில் விவசாய நிலமும் உள்ளது.

சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் ரூ. 14.91 கோடி, உணவுத் துறை அமைச்சர் ஹர்ஸிம்ரத் கவுர் பாதல் ரூ. 12.82 கோடி, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ரூ. 3.34 கோடி, ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா ரூ. 4.34 கோடி, ரயில்வே இணையமைச்சர் மனோஜ் சின்ஹா ரூ. 29.82 கோடி, நீர் வளத்துறை அமைச்சர் உமா பாரதி ரூ. 1.62 கோடி, பழங்குடியினர் நல அமைச்சர் ஜுவல் ஓரம் ரூ. 1.77 கோடி, விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜு ரூ. 3.32 கோடி, பிரகாஷ் ஜவடேகர் ரூ. 1.05 கோடி, வேளாண்துறை அமைச்சர் ராதா மோகன் சிங் ரூ. 2.47 கோடி சொத்து வைத்திருப்பதாகத் தெரி வித்துள்ளனர்.

வெங்கய்ய நாயுடு

மத்திய அமைச்சர்களிலேயே குறைந்த அளவு சொத்துக்கள் வைத்திருப்பவர் நகர்ப்புற மேம் பாட்டு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு. அவரிடம் ரூ.20.45 லட்சம் சொத்துகள்தான் உள்ளன.

லட்சாதிபதிகள்

கேபினட் அமைச்சர்களில் வெங்கய்ய நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் (ரூ.39.88 லட்சம்), நரேந்திர சிங் தோமர் (ரூ. 44.90 லட்சம்), ஹர்ஷ்வர்தன் (ரூ. 48.54 லட்சம்), அனந்த குமார் (ரூ. 60.62 லட்சம்) ஆகிய 5 பேர் மட்டுமே லட்சாதிபதிகள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x