

முதல்வர் கே.பழனிசாமி கலந்து கொண்ட விழா நடந்த ஹோட்ட லுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த திருவான்மியூர் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
ஆழ்வார்பேட்டையில் பிரபல மான நட்சத்திர ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு கடந்த 2ம் தேதி இரவு 4 இளை ஞர்கள் சென்றனர். அவர்கள் 4 பேரும் அங்கு மது அருந்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மறுநாள் அதிகாலை ஹோட்டலில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது, ஹோட்டல் அறை ஒன்றில், ஒரு துண்டுச் சீட்டு கிடந் துள்ளது. அதில், “இந்த ஹோட் டலின் 4வது தளத்தில் வெடி குண்டு வைத்துள்ளோம். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும்” என ஆங்கிலத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது.
இதுகுறித்து, ஹோட்டல் மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டது. அவர் மிரட்டல் கடிதம் குறித்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.
தேனாம்பேட்டை உதவி ஆணை யர் சுப்பிரமணி, காவல் ஆய்வாளர் கிரி தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந் தனர். மிரட்டல் கடிதத்தைக் கைப் பற்றி அதை எழுதியது யார்? என்று விசாரணை நடத்தப்பட்டது.
முதல்கட்டமாக ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த கண் காணிப்பு கேமராவை ஆய்வு செய்த னர். அப்போது, ஏற்கெனவே, ஹோட்டலுக்கு வந்த 4 பேரில் ஒருவர்தான் கடிதத்தை எழுதிப் போட்டுச் சென்றது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரை பிடித்து விசாரித்ததில் மிரட்டல் கடிதத்தை எழுதியது திருவான்மியூரைச் சேர்ந்த அருண்குமார் (44) என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவருடன் வந்த மற்ற 3 பேரை விடுவித்தனர்.
இதுபற்றி போலீஸார் கூறும் போது, அருண்குமார் சாப்பிடச் சென்றபோது அவரை ஊழியர்கள் சரியாக கவனிக்கவில்லை என்றும், அதன் காரணமாகவே அவர் அப்படி நடந்து கொண்டதாகவும் தெரி வித்தனர்.
இதே ஹோட்டலில்தான் நேற்று முன்தினம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி கலந்து கொண்ட இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சார்பில் 3வது தென் மண்டல மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.