

"அதிமுகவுக்கு உள்ளாட்சி தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள்" என சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், அம்மன்புரத்தில் நடைபெற்ற வெங்கடேச பண்ணையார் 13-வது ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சசிகலா புஷ்பா எம்.பி. விமானம் மூலம் நேற்று தூத்துக்குடி வந்தார்.
விமான நிலையத்தில் அவர் அளித்த பேட்டி:
தூத்துக்குடி மாநகராட்சியை நாடார்களுக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். ஆனால் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது நாடார் களுக்கு மட்டும் அல்ல, தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் செய்யும் துரோகம்.
சென்னை மாநகராட்சி போன்ற பெரிய மாநகராட்சியை தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கொடுத்திருக்க வேண்டும். அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாகிவிடுமோ என்றுதான், தூத்துக்குடி மாநகராட்சியை ஒதுக்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு உள்ளது.
நான் தற்போது எந்த கட்சியையும் சார்ந்தவர் கிடையாது. நன்றாக உழைக்கக்கூடிய உறுப்பினர் கள், மக்களுக்கு பணியாற்றக் கூடியவர்களுக்கு என்னுடைய ஆதரவு இருக்கும். நாடார் சமுதாயத்தினர் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறோம். எனது சம்பவத்திலும் சரி, எனக்கு முன்பு நடந்த சம்பவங்களிலும் நாடார் சமுதாயத்தினர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு இருக்கிறோம்.
ஒரு கும்பல் வேண்டுமென்றே நாடார் சமு தாயத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்று தொடர்ச்சியாக பழிவாங்கிக் கொண்டிருக் கிறார்கள். அதனை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. முதல்வருக்கு பின்னால் இருப்பவர்களுக்கு உழைக்கும் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைப் பிடிக்காது.
நாடார் சமுதாயத்தின் வீரர்கள் ஏராளமானோரை பலி கொடுத்திருக்கிறோம். எனது பதவியையும் பறிக்க பார்த்தார்கள். வருகிற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு சசிகலா புஷ்பா கூறினார்.
தொடர்ந்து திருச்செந்தூர் அருகே அம்மன் புரத்தில் உள்ள வெங்கடேச பண்ணையார் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார். மாலையில் விமானம் மூலம் சென்னை சென்றார்.