

சென்னையில் தங்கத்தின் விலை திங்கட்கிழமை ஒரு பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 056க்கு விற்பனை ஆனது.
சர்வதேச அளவில் தங்கம் விலை திங்கட்கிழமை கணிசமாக குறைந்தது. இதனால், உள்ளூரிலும் தங்கம் விலை சிறிய அளவில் குறைந்தது. சென்னையில் இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.22 ஆயிரத்து 056க்கு விற்கப்பட்டது.
22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 757க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுவே, ஞாயிற்றுக்கிழமை ரூ.2 ஆயிரத்து 762க்கு விற்கப்பட்டது.