

தமிழகம், ஆந்திரம், தெலங் கானா மாநிலங்களில் முறைகேடாக புகையிலைப் பொருட்களை தயா ரித்து விற்பனை செய்யும் நிறுவனங் கள், அரசுக்கு முறையான கணக்கு காட்டாமல் வரி ஏய்ப்பு செய்துவரு வதாக வருமானவரித் துறைக்கு புகார்கள் வந்தன. அதைத் தொடர்ந்து வருமான வரித்துறை யைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து இந்த 3 மாநிலங்களிலும் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகாருக்குள்ளான குட்கா, பான் மசாலா தயாரிக்கும் 10-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், அவற்றின் குடோன்கள் மற்றும் உரிமையாளர்களின் வீடுகள் என சுமார் 30 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது. இதில் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
இந்நிலையில், 2-வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே தீர்த்தங்கரைப்பட்டு, சோத் துப்பாக்கம் சாலையில் உள்ள பான்மசாலா, குட்கா நிறுவன குடோன்களில் நேற்று 2-வது நாளாக வருமானவரித் துறை அதிகாரிகள், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார் ஆகியோர் இணைந்து சோதனை நடத்தினர். இந்த குடோன்கள் ஆந்திராவைச் சேர்ந்த பீமா ராவ், சீனிவாச ராவ், உமா ராவ், மாதவ ராவ் ஆகியோருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்தது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள சீனிவாச ராவ் வீடு, அமைந்த கரையில் உள்ள மாதவ ராவ் வீடு ஆகிய இடங்களிலும் நேற்று சோதனை நடந்தது. இவர்கள் பான் மசாலா, குட்கா விற்பனை மூலம் ரூ.400 கோடி வரை சொத்து சேர்த்து வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.