அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% அதிகரிப்பு

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 10% அதிகரிப்பு
Updated on
1 min read

தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10% உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள அரசு செய்தி குறிப்பில்: கடந்த மாதம் 1ம் தேதி (1.7.2013) மத்திய அரசு அலுவலர்களுக்கான அகவிலைப் படியை 10% உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து, விழுக்காடு உயர்த்தி அறிவித்ததை, தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான அகவிலைப்படியை 10% உயர்த்தி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளதாக குறிப்பிடப்படுள்ளது.

மேலும், 1.7.2013 முதல் கணக்கிடப்பட்டு அகவிலைப் படி உயர்வு ரொக்கமாக வழங்கப்படும் எனவும் அந்த குறிப்பில் இடம் பெற்றுள்ளது. இந்த அகவிலைப் படி உயர்வு, உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி உதவியாளர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைவருக்கும் பொருந்தும்.

இந்த அகவிலைப் படி உயர்வினால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைவர். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டொன்றுக்கு 2,292கோடியே78லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும் என குறிப்பிடப்படுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in