எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது கலந்தாய்வு? - அண்ணா பல்கலை. இணையதளத்தில் வெளியீடு
Updated on
1 min read

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் இன்று வெளியிட்டது. மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் >www.annauniv.edu தங்கள் விண்ணப்ப எண்ணைக் குறிப்பிட்டு தங்களின் தரவரிசையை தெரிந்துகொள்ளலாம்.

விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வை தொடர்ந்து பொது கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 21-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

எந்தெந்த கட் ஆப் மதிப்பெண்ணுக்கு எப்போது, எந்த நேரத்தில் கலந்தாய்வு நடத்தப்படும்? என்ற பட்டியல் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. இதன்மூலம், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நாள், நேரம் ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்.

கலந்தாய்வுக்கான அழைப்புக்கடிதம் யாருக்கும் தபால் மூலம் அனுப்பப்படாது. மாணவர்கள் அழைப்புக்கடிதத்தை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in