Published : 15 Jun 2016 07:57 AM
Last Updated : 15 Jun 2016 07:57 AM

உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து 6 பந்தயக் குதிரைகள் பலி

கொடைக்கானலில் இருந்து சென்னைக்கு வேனில் ஏற்றிச் செல்லப்பட்ட 6 பந்தய குதிரைகள், உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த விபத்தில் இறந்தன.

கொடைக்கானலில் அண்மை யில் நடைபெற்ற மலர் கண் காட்சியையொட்டி குதிரைப் பந்தயம் நடைபெற்றது. இதற்காக சென்னை கிண்டியில் இருந்து, கொண்டுச்செல்லப்பட்ட 6 பந்தயக் குதிரைகள், போட்டி முடிந்த பின்னர் நேற்று முன்தினம் மாலை ஒரு கனரக வேன் மூலம் மீண்டும் சென்னைக்குக் கொண்டுச் செல்லப்பட்டன. இந்த வேனை சென்னையைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஓட்டிச் சென்றார். பந்தயக் குதிரையின் பயிற்சியாளர்கள் முர்தகிம், சவிஅன்வர், அசோக் உட்பட 5 பேர் உடன் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் உளுந் தூர்பேட்டை பாதூர் பேருந்து நிறுத்தம் அருகே வந்தபோது திடீ ரென வேனின் முன்பக்க டயர்கள் கழன்று ஓடியது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், அருகில் இருந்த பள்ளத் தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளா னது. இதில், ஓட்டுநர் ஆறுமுகம் உட்பட 5 பேரும் லேசான காய மடைந்தனர். ஆனால், வேனில் இருந்த 6 பந்தயக் குதிரைகளும் இடிபாடுகளில் சிக்கி ஒன்றன்பின் ஒன்றாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

காயமடைந்தவர்களை அரு கில் இருந்தவர்கள் மீட்டு உளுந் தூர்பேட்டை அரசு மருத்துவ மனைக்குக் கொண்டுச் சென்றனர்.

தகவலறிந்த திருநாவலூர் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று விபத்துக்குள்ளான வாக னத்தை மீட்டு, இறந்த பந்தயக் குதிரைகளையும் அப்புறப்படுத் தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x