

எம்.பி. நாராயணசாமியிடம் பேசினோம். “புதுச்சேரியை நாட்டின் அனைத்துப் பெருநகரங்களுடன் இணைக்கும் வகையில் ரயில் சேவையைத் தொடங்கியுள்ளோம். ஏ.எஃப்.டி. மில்லுக்கு நிதி பெற புதுவை முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. புதுச்சேரியில் 100 கோடி ரூபாயில் தொழிற்பயிற்சி மையம் அமைய உள்ளது. காரைக்காலில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை அமைக்க 45 கோடி ரூபாயை ஓ.என்.ஜி.சி. அளிக்கிறது. குடிநீர்த் திட்டங்களுக்காக 300 கோடி ரூபாய் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும். இரண்டு ரயில்வே மேம்பாலங்கள் கட்டப்பட்டுவருகின்றன. மேலும் இரு மேம்பாலங்கள் கட்ட 150 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.