தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகள் நிறுத்தம்

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகள் நிறுத்தம்
Updated on
1 min read

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தலா, 210 மெகாவாட் திறன் கொண்ட, 5 அலகுகள் மூலம், 1,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தற்போது, தாமிரபரணி நதியில் ஏற்பட்டுள்ள வறட்சியால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, ஜனவரி 7-ம் தேதி முதல் அனல் மின் நிலையத்தை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அருகில் உள்ள என்டிபிஎல் அனல் மின் நிலையத்தில் இருக்கும் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தில் இருந் தும், லாரிகள் மூலமும் தண் ணீரை வாங்கி, 2 அலகுகளை மட்டும் கடந்த 2 மாதங்களாக இயக்கி வருகின்றனர். இவை இரண்டி லும் ஏதாவது ஒரு அலகு பழுதாகி விடுவதால் பெரும்பாலான நாட் களில் ஓர் அலகு மட்டுமே செயல் படுகிறது.

கடந்த சில நாட்களாக 4, 5-வது அலகுகள் மட்டும் செயல்பட்டு வந்தன. 4-வது அலகின் டர்பன் பகுதியில் நேற்று முன்தினம் திடீரென ஏற்பட்ட பழுதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

பழுதடைந்த 4 அலகுகளையும் சரிசெய்யும் பணியில் பொறி யாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று மாலை 6 மணிக்கு முதல் அலகு மின் உற்பத்திக்கு தயாரானது. தற்போது 3 அலகுகள் பழுதாகி இருப்பதால், 620 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்படுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in