

சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய் துள்ள மனுவில் கூறியிருப்ப தாவது:
அதிமுக மூத்த நிர்வாகியான பி.ஹெச்.பாண்டியன் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளது என மும்பை பெண் தொழிலதிபர் ஒருவரின் கொலையை சுட்டிக்காட்டி பேட்டி அளித்துள்ளார். ஜெயலலி தாவின் அண்ணன் மகள் தீபாவும் இதே கருத்தை வலியுறுத் தியுள்ளார்.
ஜெயலலிதா இறந்த மறுநாளே, அதாவது டிசம்பர் 6-ம் தேதியே அவரது சாவில் மர்மம் உள்ளதாக நான் ஆயிரம் விளக்கு போலீஸில் புகார் செய்தேன். அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது தடயங்களையும் முழுமையாக அழித்துவிட்டனர். நான் கூறிய அதே புகாரைத்தான் தற்போது சசிகலாவை எதிர்க்கும் அதிமுக முன்னணித் தலைவர்களும் பேட்டியில் கூறி வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நேற்று முன்தினம் இரவு மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் சமாதிக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் சசிகலா தரப்பினர் தன்னை மிரட்டி ராஜினாமா செய்ய வைத்ததாக பகிரங்கமாக கூறியுள்ளார். அவரும் அமைச்சர்கள் சிலரின் நடவடிக் கைகளை குற்றம் சாட்டியுள்ளார். முதல்வரை மிரட்டி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியது தொடர்பாக தேனாம்பேட்டை போலீஸில் நேற்று முன்தினம் இரவே புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராணுவ பாதுகாப்பு
எனவே ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நான் ஏற்கெனவே குற்றம் சாட்டிய வி.கே.சசிகலா, எம்.நடராஜன், இளவரசி, டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ், பொன்னையன், டாக்டர் பிரதாப் சி.ரெட்டி, டாக்டர் ப்ரீத்தா ரெட்டி, சி.ஆர்.சரஸ்வதி ஆகிய 12 பேர் மீதும் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். மேலும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பி.ஹெச்.பாண்டியன், தீபா ஆகியோருக்கு ராணுவ பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும் முதல்வரை மிரட்டியது உள்ளிட்ட சம்பவங் களுக்காக அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா மற்றும் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கோரியுள்ளார்.
இந்நிலையில் நேற்று நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு டிராஃபிக் ராமசாமி தரப்பு வழக்கறிஞர் அரவிந்த் ஆஜராகி, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக்கோரி முறையீடு செய்தார். அதையேற்க மறுத்த நீதிபதி, வழக்கம்போல பிற மனுக்களுடன் விசாரிக்கப்படும் என்றார்.