அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்: பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
Updated on
1 min read

அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்று பேரவையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித் தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது வில்லிவாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ரங்கநாதன் துணைக் கேள்வி கேட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மழலையர் பள்ளிகளில் தனி யார் ஆதிக்கம் அதிகமாக உள் ளது. அப்பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க பெற் றோர் ஏராளமான பணம் செலவழிக் கிறார்கள். எனவே, அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழி மழலையர் பள்ளிகளை அரசு தொடங்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டார்.

அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் பதில் அளிக்கையில், “அங்கன்வாடிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிப்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. எல்கேஜி., யுகேஜி வகுப்புகளுடன் அரசு மழலையர் பள்ளிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப் படும். அதன்பிறகு இப்பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர் பரிந்துரைக் கடிதம் பெற்று மாணவர்களைச் சேர்க்கும் நிலை உருவாகும்” என்றார்.

ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.பி.ராமலிங்கம் எழுப்பிய துணைக் கேள்விக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பதில் அளிக்கையில், ‘‘சித்தோடு மகளிர் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும்’’ என்றார்.

பல்லடம் தொகுதி எம்எல்ஏ நடராஜன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘‘நடு நிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த நிர்ண யிக்கப்பட்டுள்ள நிபந்தனை களைப் பல்லடம் தொகுதி, திருப் பூர் ஒன்றியம், மங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி நிறைவு செய்யாததால், இப்பள்ளியை பெண்கள் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த இயலாது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in