ஆபாச இணையதளம் நடத்திய 2 பேர் சென்னையில் கைது: ரூ.2.4 கோடி குவித்தது அம்பலம்

ஆபாச இணையதளம் நடத்திய 2 பேர் சென்னையில் கைது: ரூ.2.4 கோடி குவித்தது அம்பலம்
Updated on
1 min read

ஆபாச இணையதளம் நடத்தி வந்த இருவரை சென்னையில் சிபிசிஐடி போலீஸார் நேற்று கைது செய்தனர்.

குழந்தைகளை ஆபாசமாக சித்தரித்து 2 இணையதளங்கள் இயங்கி வருவதாக சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீ ஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, விசாரணை மேற்கொண்ட போலீஸார், அந்த 2 இணையதள பக்கங்களும் சென்னையில் இருந்து செயல்பட்டு வருவதை கண்டுபிடித்தனர். இணையதளங்களை இயக்கி வந்த சோழிங்கநல்லூரைச் சேர்ந்த சித்தார்த்த வேலு, பிரிசில்லா மார்க்ரெட் தனராஜ் ஆகிய இருவரையும் கைது நேற்று செய்தனர். அவர்கள் மீது தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அவர்களிடம் மேற்கொள் ளப்பட்ட விசாரணையில் ஆபாச இணையதளங்களில் உறுப்பினர் சேர்க்கை நடத்தி அதன் மூலம், ரூ.2.4 கோடி அளவுக்கு பணத்தை சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்கள் நடத்தி வந்த இணையதளங்களோடு தொடர்புடைய மற்ற 2 இணையதளங் களையும் போலீஸார் முடக் கினர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in