

பால்வளத்துறை அமைச்சர் ரமணாவின் சித்தப்பா மகனான ரவி என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான வேப்பம்பட்டுவைச் சேர்ந்த முருகன் (30) என்பவர் போலீஸில் நேற்று சரணடைந்தார்.
அவருடன் இக்கொலை சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பாலாஜி (38), நாகராஜன் (32), சக்தி என்கிற செங்குட்டுவன் (35) ஆகியோர் திருவாலங்காடு காவல் நிலையத்தில் நேற்று மாலை சரணடைந்தனர்.
4 பேரின் சரண் குறித்து தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீஸார் திருவாலங் காடுக்கு விரைந்து சென்ற னர். சரணடைந்தவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.