

சென்னை உயர் நீதிமன்ற முற் றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 30 வழக்கறிஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 5 வழக்கறிஞர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வழக்கறிஞர்களுக்கான சட்டத் தில் கொண்டு வரப்பட்ட திருத்தங் களை திரும்பப்பெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜூலை 25-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இந்திய பார் கவுன்சில் 126 தமிழக வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்தது. இதனால் வழக்கறிஞர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது.
இந்நிலையில், திட்டமிட்டபடி தமிழகம் முழுவதும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 15 பெண் வழக்கறிஞர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்து இரவில் விடுதலை செய்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட போராட்ட ஒருங்கிணைப் பாளரும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க துணைத் தலைவருமான கினி இம்மானு வேல், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்க தலைவர் கருணா கரன் உட்பட 30 பேர் மீது பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படுத்தியது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவு களின் கீழ் பூக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இவர்களில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் கருணாகரன் உட்பட 5 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்த போலீஸார், ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வடிவேல் வீட்டில் நேற்று காலை ஆஜர்படுத்தினர். 5 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 5 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் வழக்கறிஞர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது. சென்னை உயர் நீதிமன்றத் தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத் தப்பட்டுள்ளது.