

தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை கண்டறியும் பணியை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் விரை வில் தொடங்க உள்ளனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவது போல், சாலை விபத்துகளும் அதி கரித்து வருகின்றன. கடந்த ஆண் டில் நடந்த சாலை விபத்துகளில் மொத்தம் 15 ஆயிரத்து 642 பேர் உயிரிழந்தனர். 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 452 பேர் அதிகமாக இறந்துள்ளனர்.
ஓட்டுநர்களின் கவனக் குறைவு முக்கிய காரணமாக இருந்தாலும், சில இடங்களில் சாலைகள் வளைவு அதிகமாக இருப்பது, தரமற்ற சாலை பராமரிப்பு ஆகியவையும் காரணமாக உள்ளது.
இதற்கிடையே, புதியதாக பொறுப்பேற்றுள்ள போக்குவரத் துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் முதல்முறையாக ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இதில், போக்குவரத்துத் துறை ஆணையர் சத்திய பிரதாப் சாகு, இணை மற்றும் துணை ஆணை யர்கள், 81 வட்டார போக்கு வரத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். சாலை விபத்துகளை தடுக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண் டும் என அதிகாரிகளுக்கு அமைச் சர் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது: போக்குவரத்துத் துறை அமைச் சருடன் நடந்த கூட்டத்தில் பல்வேறு உத்தரவுகளை எங்களுக்கு பிறப் பித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மட்டும் சாலை பாது காப்பு வாரத்தை கடைபிடித்தால் போதாது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வாகனங்களுக்கு உரி மம் வழங்குவதில் எந்த முறை கேடும் கூடாது.
தமிழகத்தில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை விரைவில் தேர்வு செய்து அறிக்கையாக வழங்க வேண்டும். பள்ளி வாகனங்களுக்கு முழுமை யாக ஆய்வு நடத்தப்பட்ட பிறகே எப்சி வழங்க வேண்டும் என அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அந்தந்த ஆர்டிஓ-க்களின் எல் லைக்கு உட்பட்ட பகுதிகளில் அதிகமாக சாலை விபத்துகள் நடக்கும் இடங்களை விரைவில் தேர்வு செய்ய உள்ளோம். இந்த அறிக்கையை அமைச்சர் ஆய்வு செய்த பின்னர், தேவையான இடங்களில் பாலங்கள், சுரங்கப் பாதைகள், சாலையின் வளைவு கள் நீக்கம், மின் விளக்குகள் பொருத்துதல், எச்சரிக்கை பலகை கள் நிறுவுதல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மூலம் மேற்கொள்ளவுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.