

பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதியன்று ஜெயங்கொண்டம் தொகுதி பாமக உறுப்பினர் குரு கைது செய்யப்பட்டார்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக அவர் மீது மே மாதம் 10-ஆம் தேதியன்று தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்நிலையில், குருவின் தாயார் கல்யானி சென்னை உயர் நீதிமன்றத்தில் தன் மகன் மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.குரு மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் குரு 4 முறை கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.