

சென்னையில் தற்போது, விமான நிலையம் சின்னமலை கோயம்பேடு, பரங்கிமலை - கோயம்பேடு வரையில் தினமும் மெட்ரோ ரயில்கள் இயக்கப் பட்டு வருகின்றன. அடுத்த கட்டமாக கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் களை இயக்க, கடந்த சில மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகி றது. 6 மீட்டர் அகலத்தில் 10 முதல் 20 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் இயக்கப்படும். கோயம்பேடு, திருமங்க லம், அண்ணாநகர் டவர், ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா வரையில் முதல் கட்ட மாக சுரங்கப் பாதையில் ரயில்கள் இயக்கப்படும்.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் பயணிகளுக்கு பல் வேறு வசதிகளுடன் ரயிலில் பயணம் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில், ரயில் நிலையங்களில் ஏசி வசதி செய்யப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களின் உள்பகுதியில் மின்விசிறிகள், மின்விளக்கு அமைக்கப் பட்டிருந்தாலும், சில இடங்களில் சூரிய வெளிச்சம் வரும் வசதியும் உள்ளது.
சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில்களை இயக்க நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். மெட்ரோ ரயில்களை இயக்க ஒப்புதல் அளிக்கும் வகையில் வரும் மார்ச் 2-வது வாரத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கொண்ட குழுவினர் வந்து ஆய்வு நடத்துவார்கள். அதன்பிறகு தமிழக அரசிடம் அனுமதி கோரப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் மக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.