வழக்கறிஞர்களின் போராட்டம் வேதனை அளிக்கிறது: தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உருக்கம்

வழக்கறிஞர்களின் போராட்டம் வேதனை அளிக்கிறது: தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உருக்கம்
Updated on
2 min read

உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கள் நடத்தும் போராட்டம் வேதனை அளிக்கிறது என தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் உருக்கமாக தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழக் கறிஞர் சூரியபிரகாசம் ஆஜராகி, ‘‘உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் வாதிட வரும் வழக்கறிஞர்களைக் கூட போலீஸார் அனுமதிக்கவில் லை. வடக்கு பகுதியில் உள்ள எம்பிஏ கேட் மற்றும் ஆவின் கேட் பகுதிகளை இழுத்து மூடி பூட்டு போட்டுள்ளனர். இதனால், வழக்கு விசாரணைக்காக உயர் நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் வர முடியவில்லை’’ என்றார்.

அதற்கு தலைமை நீதிபதி, ‘‘அந்த பகுதியில் ஏதாவது சம்ப வம் நடந்திருக்கலாம். அதனால், நுழைவுவாயில் கதவுகள் மூடப்பட் டிருக்கலாம்’’ என்றார்.

அப்போது உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் டி.ரவீந்தி ரன், ‘‘நுழைவாயில்கள் முன்பு போடப்பட்ட தடுப்புகளை சில வழக்கறிஞர்கள் இழுத்துப்போட்டு உடைக்க முயன்றனர். அதனால் கதவுகளை மூடியுள்ளோம்’’ என்றார்.

அதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கூறியதாவது:

இதுபோன்ற அசாதாரண சூழலில் போலீஸாரின் நடவ டிக்கையில் நாங்கள் தலையிட முடியாது. அவர்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கின்றனர்.

நானும் வழக்கறிஞராக பணி யாற்றி விட்டுத்தான் தலைமை நீதிபதியாக பதவி வகிக்கிறேன். உயர் நீதிமன்றத்தில் தற்போது நிலவும் சூழல் எனக்கு வேதனை அளிக்கிறது. உயர் நீதிமன்றத்தை முற்றுகையிடப் போவதாக வழக்க றிஞர்கள் அச்சுறுத்தல் விடுத்தால் வேறு என்ன செய்ய முடியும்?.

வழக்கறிஞர்கள் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய திருத்தங்களில் ஏதாவது ஆட்சே பம் இருந்தால், 5 நீதிபதிகள் அடங்கிய குழு முன்பாக வழக்க றிஞர்கள் தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் என்று பலமுறை கோரிக்கை விடுத்துவிட்டோம். ஆனால் போராட்டத்தில் ஈடுபட் டுள்ள வழக்கறிஞர்கள், அதைச் செய்ய முன்வரவில்லை. இது துரதிருஷ்டவசமானது. இந்த முற் றுகைப் போராட்டத்தையொட்டி போலீஸாரின் பாதுகாப்பு ஏற்பாடு களால் யாருக்காவது அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகி றோம்.

சட்டத் திருத்தங்கள் அனைத்தும் வழக்கறிஞர் சங்கங்களின் பிரதி நிதிகள் முன்னிலையில் கொண்டு வரப்பட்டவைதான். உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில்தான் இந்த திருத் தம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏதாவது ஆட்சேபம் இருந்தால் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத் தில் வழக்கு தொடரலாம்.

நான் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவன். ஆனால், இங்குள்ள பெரும்பாலான நீதிபதிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தானே? அவர் களும் இங்கு வழக்கறிஞர்களாக இருந்துதானே நீதிபதி பதவிக்கு வந்துள்ளனர். சட்டத் திருத்தத்தில் பிரச்சினை இருந்தால், அந்த நீதிபதிகளை சந்தித்து தங்களது கருத்துக்களை தெரிவிக்க வழக் கறிஞர்களுக்கு என்ன சிரமம் இருக்கிறது?

கடந்த ஆண்டுகூட எனது நீதி மன்றத்திலேயே சில வழக்கறிஞர் கள் வாயில் கருப்புத்துணி கட்டி அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போதும்கூட அமை தியாக என் வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். அந்த வழக்க றிஞர்கள் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. அவர்களே விரும்பித்தான் கைதானார்கள். அதன்பிறகும்கூட அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த முற்றுகைப் போராட்டத் தின் மூலம் பொதுமக்களுக்கும், பிறமாநில வழக்கறிஞர்களுக்கும் இந்த வழக்கறிஞர்கள் என்ன தகவல் சொல்ல நினைக்கிறார்கள்? எனது 15 ஆண்டுகால நீதிபதி பணி அனுபவத்தில் இதுவரை வடமாநி லத்தில் உள்ள 2 வழக்கறிஞர்கள் மீது மட்டும்தான் நீதிமன்ற அவம திப்பு நடவடிக்கை எடுத்துள்ளேன். எனவே, வழக்கறிஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு நீதி மன்றத்துக்கு செல்ல அறிவுரை கூறுங்கள். இதையெல்லாம் போய் உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள் என வழக்கறிஞர் சூரியபிரகாசத்திடம் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in