கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழு: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்

கூட்டுறவு சங்கங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு குழு: அமைச்சர் செல்லூர் ராஜூ தகவல்
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுறவுச் சங்கங் களிலும் முறைகேடுகள் ஏற்படா மல் தடுக்க மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டுள்ளது என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

கூட்டுறவுத்துறை துணைப்பதி வாளர்கள், சார் பதிவாளர்களுக்கு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் மற்றும் அதனை ஆக்கபூர்வமான முறையில் செயல்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு சென்னை யில் நேற்று தொடங்கியது. இதனை தொடங்கி வைத்து அமைச்சர் பேசியதாவது:

கூட்டுறவுச் சங்கங்களை நிர்வகித்தல், தொடர்ந்து கண் காணித்தல், நெறிமுறைப்படுத்து தல் ஆகியவை துணைப்பதி வாளர்களின் முக்கிய பணியாகும். அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சங்கங்களை தொடர்ந்து ஆய்வு செய்து வந்தாலே பெருமளவில் தவறு நடப்பதை குறைத்து, சங்கங்கள் லாபகரமாக செயல்படுவதை உறுதி செய்ய முடியும்.

மேலும், மாநிலத்தில் உள்ள அனைத்து வகையான கூட்டுற வுச் சங்கங்களிலும் முறைகேடு கள் ஏற்படாமல் தடுக்கவும், முறைகேடுகளை உடனே களைந் திடவும் மாநில அளவிலான கண்காணிப்பு குழு அமைக்கப் பட்டுள்ளது. இக்குழுவானது பதிவாளர் அறிவுரைப்படி திடீர் ஆய்வுகள், தீவிர ஆய்வுகள் மேற்கொண்டு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் உரிய ஆதாரங்களுடன் பதிவாளர் கவனத்துக்கு உடனடியாக கொண்டு சென்று உரிய மேல் நடவடிக்கை எடுத்திட வழிவகுக் கும். இக்குழு 30 துணைப் பதிவாளர்கள், 144 கூட்டுறவு சார் பதிவாளர்கள் அடங்கிய குழுவாகச் செயல்படும்”என்றார்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாது காப்புத்துறை முதன்மைச் செய லாளர் பிரதீப் யாதவ், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் ஞானசேகரன், கூடுதல் பதிவாளர் ஆர்.பிருந்தா, நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலைய இயக்குநர் பி.ஜெகன்னாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in